நல்லவர்களைப் பருத்திச் செடிபோல என்கிறார் துளசிதாசர்.
ஏன் பருத்திச் செடி?
அதன் பழத்தை(?)ச் சமைக்கவோ சாப்பிடவோ இயலாது. ருசி இல்லை, ஆனால் உள்ளே இருக்கும் பஞ்சு வெள்ளைவெளேர் நிறம், இழைகள் நிறைந்தது. அதைப் போட்டுப் படுத்தி எடுத்திப் பச்சடியாக்கித் திரித்து இழையாக்கி, ஊசி கொண்டு குத்தித் தைத்து ஆடையாக்குகிறார்கள். எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு அடுத்தவர்களுடைய நிர்வாணத்தைப் போர்த்தி மூடுகிறது, அதன்மூலம் உலகில் தனக்கென்று ஒரு கௌரவத்தைத் தேடிக்கொள்கிறது.
நல்லவர்களும் அதேபோலதானாம். இதைவைத்துப் பல நுணுக்கமான ஒப்பீடுகளை நீங்களே செய்துகொள்ளலாம் smile emoticon