இன்று மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன், ஈழப் போராட்டத்திலும் இலக்கியத்திலும் முன்னொரு காலத்தே என்போன்றோருக்கு ஆதர்சமாயிருந்தவர். மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை, தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(TLO), ஈரோஸ் போன்றவற்றில் அர்ப்பணிப்புகளோடு உழைத்தவர். சிறையிலும் பசியிலும் கனவுகளிலும் வாழ்ந்தவர்.
புலம்பெயர்ந்த பின்பாக மெல்ல மெல்ல புலிப் பாஸிசத்தின் ஊதுகுழலாக கவிஞர் சீரழிந்துபோனார். புலிகளை நியாயப்படுத்த தன் நெஞ்சறிய அவர் பொய்யுரைக்க ஆரம்பித்தபோது அவரது ஆன்மா மரித்துப் போனது. அதன் பின்னாக அவரால் கவிதைகள் எழுத முடியவில்லை.
ஒவ்வொரு இழப்பிலும் நமக்குக் கற்றுக்கொள்ள கனக்க இருக்கிறது, முன்னோடிக்கு தலைசாய்த்து அஞ்சலிகள்.
அன்பு அண்ணன் கி.பி. அரவிந்தன் அவர்களுக்கு அஞ்சலிகள். நெருக்கமானவர்களுக்கு அஞ்சலி சொல்லும் ஒவ்வொரு பொழுதுகளிலும் நாமும் மரணித்து உயிர்த்தெழுவதாகவே தோன்றுகிறது. அவரின் ஒத்துழைப்பு இல்லையெனில் எனது யாழ் நூலகம் குறித்த எரியும் நினைவுகள் ஆவணப்படம் அப்போது வெளிவந்திருக்க வாய்ப்பில்லை.அதனை வெளிக் கொண்டு செல்வதில் அவர் விருப்போடு இணைந்து கொண்டார். கடைசியாக அவரோடு நமது போராட்ட வரலாற்றைப் பதிவு செய்வது தொடர்பாகப் பேசியிருந்தேன். விடியோவில் உங்கள் அனுபவங்களையும் போராட்டத்தின் ஆரம்ப காலங்கள் குறித்த அனுபவங்களையும் பதியுமாறு அவரிடம் கேட்டேன். எழுதுவதாகச் சொன்னார். ஈழத்தில் ஆயுதப் போராட்ட ஆரம்ப நாட்களில் முதல் வீர மரணம் அடைந்த போராளி சிவகுமாரன் சயனைற் குப்பி கடித்த போது அந்த களத்தில் இருந்தவர் சுந்தர் என்கிற கிறிஸ்டோபர் பிரான்சிஸ் ஆகிய அரவிந்தன் அண்ணா. நான் அவருடன் பேசத் தொடங்கியது முதலாகவே அவருக்குள் ஒரு அரசியல் குழப்பம் இருந்து வந்ததை உணர்ந்திருக்கிறேன். எப்போதும் வெளிப்படையாகப் பேசத் தயக்கம் அவருக்குள் இருந்தது. சென்னையில் ஈழ புலம்பெயர் குறும்படங்கள் சிலவற்றை அவர் திரையிட்ட ஒரு நாளிலேயே அவரை முதல் முதலில் சந்தித்தேன். பலரது படைப்புகளும் வெளியே வரவேண்டும் என்பதில் தன்னலமில்லா செயற்ப்பாட்டாளர்.
- அ. ராமசாமி, Thiagarajah Wijayendran, Kuna Kaviyalahan and 12 others like this.
- மறவன்புலவு க. சச்சிதானந்தன் 08.03.2015 நண்பகல்.
1973 கார்த்திகையில் யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் பாடசாலையில் முதல் சந்திப்பு. நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்காக நான் அமைத்த தொண்டரணியில் சிவகுமாரனும் கிறிசுத்தோபர் பிரான்சிசும் தொண்டர்கள்.
1974 தை 11 வரை நீண்ட இத்தொடர்பு, 1975 தை 10இல், 1976 தை10இல் சுந்தர் என்ற பெயருடன் நினைவுச் சின்னம் அமைக்க, மீளமைக்க வந்த அருமைத் தொண்டர்.
1981இல் சென்னை எழும்பூரில் தற்செயலான சந்திப்பு. அதற்குப் பின்னர் அவரோடு தொடர்புகள் நீடித்தன, பிரான்சிலிருந்தும் இணையவழித் தொடர்பு.
2013இல் பாரிசு நகருக்கு நான் சென்றதன் முதல் நோக்கம் கிறிசுத்தோபர் பிரான்சிசு என்ற சுந்தர் என்ற கி பி அரவிந்தனைப் பார்க்க. நோயுற்றார் என்ற செய்தியால் வாட்டமுற்ற நான் அவருக்காகப் பாரிசில் ஒரு நாளை ஒதுக்கினேன்.
மென்மை மேன்மை இனிமை கொண்ட தொண்டர், போராளி, ஊடகத்தார், எழுத்தாளர், கருத்துருவாக்கி, ஆழ்ந்த தமிழ்த் தேசியவாதி.
அவர் மருத்துவ மனையில் காலமானார் என்ற செய்தியால் மலைத்தேன். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் புற்றுநோய்க்கு ஆளாகினார்.