S. Charu Hasan
12 hrs ·
இன்னும் சில உண்மைகள்.
இந்த பிரபல உச்சநீதி மன்ற வக்கீல் மாமனைப் பார்க்க வந்ததில் மனம் நொந்த ஸ்ரீமதி சாருஹாசன் அவர்கள் போல் நான் மனம் நொந்த நேரம் 1954 ல் நான் வேலைக்கு வந்த உடன் எனக்கு ஏற்பட்டது. இடதுசாரிக் கட்சி ஒன்றே-ஒன்று இருந்தபோது அதில் கட்சி உருப்பினராக இருந்துகொண்டு நான் வக்கீல் தொழிலுக்கு வந்தவன். பின்னால் நக்ஸலிஸம், மார்க்சிஸம், மாவோயிஸம், இந்திய கம்யுனிஸம், டெமொகிராடிக் சொஷியலிஸம், இந்திராயிசம் எல்லாம் வந்துவிட்டபோது; நான் திராவிட முன்னேற்றக் கழக வக்கீலாகி என் ஜூனியர்களையெல்லாம் நீதிபதி தேர்வுக்கு அனுப்பும் அளவுக்கு வளர்ந்துவிட்டது மற்றோரு விஷயம்.
1962 ல் சில இடது சாரிகள் சிறைக்கும் என் தந்தையின் நெருங்கிய நண்பர் பி ராமமூர்த்தி போன்றவர்கள் தலமறைவானதும், என் போன்ற கோழைகள் இந்திய கம்யுனிஸ்ட் கட்சிலிருந்து விலகினோம்,
இந்திய-சீன போருக்கு என் மனமார்ந்த நன்றி.
1967 ல் என் பழய வழக்காடிகள் மக்கள் சபைக்கும் மந்திரி சபைக்கும் போய்விட்டதால் நான் மதிப்பிழந்து வக்கீல் வாழ்க்கையிலிருந்து வழுக்கி விழுந்து (கற்பிழந்து………..?) நடிகனாகிவிட்டது இன்னொரு கதை.
பரமக்குடியில் இருளாண்டி முதலியார் ஒரு பெரும்புள்ளி. பிரபல வக்கீல் மகன் சாருஹாஸனும் வக்கீலாகிவிட்டது கேள்விப்பட்டு 1952 இல் என்னை அழைத்து வரச் சொல்லி குதிரை வண்டியை அனுப்பினார்.....
அவர் குட்ஸ் ரெயிலில் 1937 ல் செவெர்லெட் டூரரை பரமக்குடிக்கு கொண்டு வந்தபோது நானும் கூட்டத்தோடு கூட்டமாய் ரெயில் ஸ்டேஷனில் வேடிக்கை பார்த்தது ஞாபகம் இருந்தது. இன்று நான் ஒரு 1936 ம் வருட மாரிஸ் 8 டப்பா காரை, என் மாமன் பார்த்தசாரதியிடம் 500 ருபாய் கடன் வாங்கி வண்டியை 850 ரூபாய்க்குப் பேசி ஓட்டிக் கொண்டிருந்தேனே! அதிலாவது வரச்சொல்லி அழைத்திருக்கலாம்……… என் மாமன் கடனை இன்னும் தீர்க்கவில்லை.
அவரும் இன்றும் பிரம்மச்சாரியாய் ஒரு முதியவர் இல்லத்தில் நோய்வாய்ப் பட்டவருக்கு என் கடனை உலகனாயகன் தீர்த்துக் கொண்டிருந்து . எலெக்ட்ரிக் எரிபொரள் கொண்டு நேரில் வந்து "பொருளடக்கம்" செய்தார்
… வக்கீலை வீட்டுக்கு அழைத்த முதலியார் அவர்கள்மீது எனக்கு கோபம் வந்தாலும் “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்று வந்த குதிரை வண்டியில் ஏறிப் போய்த் தொலைந்தேன்.
இரண்டு ரூபாய் நோட்டுக்கு மேல் வாங்கி பழக்கமில்லாதவன் ஒரு நூறு ருபாய் நோட்டைப் பார்த்து மயங்கி வாங்கி கொண்டேன். பின்னால்தான் தெரிந்தது அவருக்கு சொந்தமான ஐந்து கிராம கம்யூனிஸ்டுகளையும் நான் இழந்தேன் என்று!! நான் திராவிட கழக வக்கீலாக மாறிவிட்டதுக்கு அதுவும் ஒரு காரணம். அண்ணாயிஸம் வந்ததும் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் சட்டப்படி……….? முழுக்குப்
போட்டு விட்டு நடிகனானேன்.