Tuesday, March 3, 2015

Vimaladhitha Maamallan on Puliyur Murugesan: Gnani reply and Perumal Murugan


நேர்மை 

ஏதோ ஒரு ஆங்கில செய்தி சேனலில் புலியூர் முருகேசன் தாக்கப்பட்டது குறித்து ஞாநி கண்டனம் தெரிவித்துக் கொண்டிருப்பதைக் காண நேர்ந்தது. 

புலியூர் முருகேசன் எழுதிய கதை என்ன என்றோ எழுதிய விதம் என்ன என்றோ எப்படி அந்தக் கதை தனிப்பட்ட அடையாளங்களை வேண்டுமென்றே வெளிப்படுத்துகிறது என்றோ ஞாநி குறிப்பிடவில்லை. 

அவரது கருத்தை வைத்துக்கொண்டு செய்தியாளர் அடிப்படைவாத சக்திகளின் வன்முறை ஆன் தி ரெய்ஸ் என்று புலியூர் முருகேசன் செய்திக்கு மங்களம் பாடி முடித்துக்கொண்டு அடுத்த செய்திக்கு சென்றார். 

பச்சைக் குழந்தைக்கும் இது ஞாநி என பளிச்சென அடையாளம் தெரியும்படியாக, ஞாநியின் தனி வாழ்வின் கெளரவமாய் சொல்லிக்கொள்ள முடியாத, அந்தரங்கத்தை அப்படியே அப்பட்டமாக நான் எழுதுகிறேன். ஞாநியை விடுங்கள், சிரிப்பை பதிலாய் அளித்து தம் இமேஜை இன்னமும் உயர்த்திக்கொள்ளும் சாதுர்ய ஜனநாயகர் அவர். போகவும் என்னை அடிக்க நினைத்தாலும் முடிகிற நிலையில் பாவம் அவர் உடல்நிலையும் இப்போது இல்லை. ஆனால் ஞாநி ஒரு வாழும் போதிமரம் என நினைக்கும் நிறைய புண்ணாக்குகள் அவரைச் சுற்றி உள்ளன. நான் எழுதுவதைப் படித்தால், வாழ்வதற்கான ஆதார நம்பிக்கையே புண்ணாக்குகளுக்கு அற்றுப் போய்விடும். அவர்களில் யாரேனும் ஒருவர் கூட என்மீது வன்முறை பிரயோகிக்க முனையமாட்டார் என்று ஞாநியால் உத்திரவாதம் தரமுடியும். 

புலியூர் முருகேசன் தாக்கப்பட்டது தவறு. ஆனால் புலியூர் முருகேசன் வன்மத்துடன் தனி அடையாளங்களைத் தூலமாக்கி எழுதியது, அவர் தாக்கப்பட்டதற்கு எந்த விதத்திலும் குறைவான தவறல்ல.

வாழ்க்கையில் ஒரு சில கணங்களேனும் உண்மையாக இருக்கப் பார்ப்பதும் உண்மையை முழுமையாய் பேச முயல்வதும் பெரிய கொடுப்பினை. பாவம் அறிவாளி பிம்பர்களுக்கு அது ஒரு போதும் வாய்ப்பதில்லை.

Like ·  · 
  • ஞாநி சங்கரன் புலியூர் முருகேசன் பற்றிய என் கருத்துகளை ஆங்கில சேனல்கள் எப்படி ஒளிபரப்பின என்று நான் காணவில்லை. முருகேசன் தாக்கப்பட்டது தவறு என்று பேசிய நான், அவர் எழுத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த கதையில் அவர் புலியூர் பெருங்கூட்டம் என்று குறிப்பிட்ட சிலரை அடையாளப்படுத்தி எழுதியிருக்கக்கூடாது என்றும் தெரிவித்தேன். அந்தப் பகுதி ஒளிபரப்பப்படாமைக்கு நான் ஏதும் செய்வதற்கில்லை. //வாழ்க்கையில் ஒரு சில கணங்களேனும் உண்மையாக இருக்கப் பார்ப்பதும் உண்மையை முழுமையாய் பேச முயல்வதும்//மாமல்லனுக்கேனும் என்றேனும் ஒரு பெரிய கொடுப்பினையாக வாய்க்க வாழ்த்துகிறேன்.
    8 hrs · Like · 8
  • விமலாதித்த மாமல்லன் நா சொன்னேனா இல்லியா  <சாதுர்ய ஜனநாயகர்>
    5 hrs · Like · 2
  • ஞாநி சங்கரன் இதில் சாதுர்யம் எதுவும் இல்லை மாமல்லன். முருகேசன் பிரச்சினை பற்றிய என் கருத்தை தெளிவாக சொல்லியிருக்கிறேன். அவ்ர் எழுத்தில் சிலரை அடையாளபடுத்தியது தவறு, அவர் தாக்கப்பட்டதும் தவறு என்று. அவரவருக்கு தேவையான உண்மையை அவரவர் ஒளிபரப்புகிறார்கள். இதில் என் சாதுர்யம் எங்கிருந்து வந்தது ? நான் சொல்லும் உண்மை உன் உண்மையிலிருந்து மாறுபட்டுவிட்டால், நான் சாதுர்யனாகிவிடுவேனா அல்லது நீ சாதுர்யனாகமாட்டாயா? உண்மையே தேடுவதே வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் நீ உண்மையை தரிசிக்கும்போது ஏற்கத் தயங்கலாகாதே.