பார்த்த படம் : " அரபானி " இஸ்ரேலியப் படம்
---------------------------------------------------------------------------------------------------
சமீபத்தில் பார்த்த போது கேள்விகள் என்னைத் தாக்கிக் கொண்டே இருந்தன. யூசூப் தனது கிராமத்திற்கு 17 ஆண்டுகள் கழித்துத் திரும்புகிறான. கூட அவனின் வளர்ந்த மகனும், மகளும் . யூத மனைவியை விவாகரத்து செய்து விட்டு சொந்த டுரூஸ் சமூக மக்கள் வாழும் இடத்திற்கு வருகிறான். டுரூஸ் சமூகம் இஸ்லாமியப் போக்குகளோடு இணைந்தது.நாட்டிற்கும் மதத்திற்கும் ரொம்பவும் கட்டுப்பட்டது. கிராமத்தினர் வளர்ந்த அந்த இருவரையும் சமூகக் கட்டுப்பாட்டை மீறுபவர்களாகவே பார்க்கிறார்கள்.அவன் சிகரெட் பிடிப்பது கிராமத்தினருக்குப் பிடிப்பதில்லை. அவள் பையன்களுடன் சாதாரணமாகப் பேசுவதும் உலவுவதும் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. யூசூப் தன்து பழைய காதலியைத் தேடிப் போகிறான. அவள் வேறொருவனின் மனைவி. அவனை நிராகரிக்கிறாள். அவள் கணவனுடன் நட்பு இணக்கமாகவே இருக்கிறது. ஆனால் எல்லோரும் சமூகக் கட்டுப்பாட்டிற்குளேயே நின்று பழகுகிறார்கள். யூசூப்பின் அம்மா அவர்களின் சமூகத்திலிருது மெல்ல விலக்கப்படுவது அவளை வேதனைகுள்ளாக்குகிறது. கண்ணாடி ஜன்னல் உடைக்கப்படுகிறது. வெளியேறு என்று சுவற்றில் எழுதி வைக்கிறார்கள். மறுக்கிற போது வீட்டை இன்று இரவே தீவைத்துக் கொளுத்துடுவோம் என்று வாசகங்களை எழுதி வைக்கிறார்கள். யூசூப் ரொம்பவும் பயந்துதான் போகிறான். வீட்டை அவர்கள் கொளுத்தும் காட்சிகள் அவனுள் வந்து போகின்றன. ( இக்காட்சிகளில் நான் நிலை குலைந்து போனேன் . எவ்வளவு கொடூரம். வீட்டில் எல்லோரும் இருக்கும் போதே சுற்றிலும் தீப்பந்தங்களுடன் அவர்கள் சமூக மனிதர்கள் எதிர்ப்புக் கோபத்துடன் ) , இனி தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிலையில் யூசூப் அவனின் வயதான அம்மாவை முன்பு போல அவ்வீட்டில் தனியாக விட்டு விட்டு மகன், மகளுடன் கிளம்புகிறான். முன்பு அக்கிராமத்திற்கு கிளம்பும் போது நவீன ஆடை அணிந்த மகளின் தலையை ஒரு முக்காட்டுத்துணியைத் தேடி எடுத்து மறைக்கச் செய்கிறான் யூசூப். இனி அந்த மூக்காட்டுதுணி அவளுகுத் தேவையில்லைதான்.
டுரூஸ் சமூகம் இஸ்லாமியப் போக்குகளோடு இணைந்து சிரியா, லெபனான், இஸ்ரேல், ஜோர்டான் போன்ற நாடுகளில் வாழும் சிறு இனம். மதக்கட்டுப்பாடுகளில் அமிழ்ந்து இருக்கும் சமூகம். அவர்கள் பேசும் மொழிக்கு கூட தனிப் பெயரில்லை. ஆனால் எல்லாவகைகளிலும் தனிக் கட்டுப்பாடுகள் இருக்கும். அந்த டுரூஸ் சமூகத்தைச் சார்ந்த முதல் இயக்குனர் அடி அத்வான்.இராணுவத்தில், வங்கியில் பணிபுரிந்தவர்.
நெடுநாள் ஆசையாக படம் எடுக்கிற முயற்சியில் தன் சமூகப் பற்றிய கட்டுப்பெட்டிப் பார்வையை முன் வைத்திருக்கிறார் இந்தக்கட்டுப் பெட்டித்தனத்திற்குள் கட்டுப்படுகிறதாய் சிறுபானமை சமூகங்கள் எப்போதும் கிடக்கின்றன.