Wednesday, March 4, 2015

Futuristic Scifi story: Inception 2015

அஞ்ஞானச் சிறுகதை

முன்பின்

2025. 
”வெல்கம் டூ ப்ரொஃபஷனல் சைஃபை மாஃபியா.” என்று வரவேற்றான் நீல். 

”நல்லா கேளுங்க மிஸ்டர்.சுனில் மத்தாய், உங்களுடைய போட்டி தொழிலதிபரான விகேஷ் குமாரை நீங்க தீர்த்து கட்டணும். அதுவும், நீங்களும் அவரும் பத்து வருடங்களுக்கு முன்பு தொழிலில் நுழைந்தீர்கள் அல்லவா, அந்த காலத்திற்கே பின்னோக்கி போய் தீர்த்து கட்டனும். முளையிலேயே கிள்ளி எறிஞ்சிட்டா விகேஷ் குமார் இன்னைக்கு உங்களுக்கு போட்டியா இருக்க மாட்டார். அது தானே உங்கள் விருப்பம்” என்ற படி கூலிங்கிளாஸுக்குள் கண் சிமிட்டினான் நீல். 

ஆமா என்பதாக தலையசைத்தார் சுனில் மத்தாய். பெருத்த கோட் அணிந்த அவர் உடல் லேசாக குலுங்கியதில் கழுத்தில் கிடந்த டை ஆடியது. 

“அதுக்கு எங்கள் சைஃபை மாஃபியா உங்களுக்கு உதவும். இந்த அறை ஒரு வார்ம்ஹோல் போல செயல்படும். அங்கே பத்து வருடங்கள் பின்னோக்கி போய் நீங்கள் விகேஷ் குமாரை தீர்த்து கட்டலாம் உள்ளே வாருங்கள்” என்றபடி அந்த பளிச்சிடும் அறைக்கதவை திறந்து உள்ளே போனான் நீல். சுனில் மத்தாய் ஆச்சரியமும் வெறியும் கலந்த முகத்துடன் கூடவே நுழைந்தார். 

அங்கே விகேஷ் குமார் துப்பாக்கியை நீட்டிய படி நின்றிருந்தார்.
ஒரு நொடி அதிர்ந்த சுனில் மத்தாய் “என்னது இது” என்று கத்தினார்.

“அவர் 2015லிருந்து வந்திருக்கிறார். அட்வான்ஸ்டு புக்கிங்.” என்று சிரித்தான் நீல்.

'அஞ்ஞானச் சிறுகதை

“அவர் 2015லிருந்து வந்திருக்கிறார். அட்வான்ஸ்டு புக்கிங்.” என்று சிரித்தான் நீல்.'