நேற்று பாண்டிச்சேரியிலிருந்து இராணிப்பேட்டைக்கு திரும்பிவரும்போது, பாண்டிசேரி சுங்கச்சாவடியில் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தபிறகே அனுமதித்துக் கொண்டிருந்தனர் காவல்துறையினர். நான் காரில் முன்புற இருக்கையில் அமர்ந்திருந்தேன். ஒரு அதிகாரி எங்கள் காரை சோதனையிடாமலே செல்லும்படி சைகை காட்டியுள்ளார். நான் அதைக் கவனியாமல், அவர் ஏதாவது கேட்டால் விடையளிக்கலாம் என காரின் கண்ணாடியைக் கீழிறக்கினேன். அந்த அதிகாரியுடன் இருந்த இன்னொரு காவலர் விரைந்துவந்து எனக்கு ஒரு சல்யூட் அடித்தார் பாருங்கள் நடுங்கிப்போய் விட்டேன். அந்த அதிகாரி, உங்கள் காரை நிறுத்தவே சொல்லவில்லை.. நீங்கள் செல்லுங்கள் மேடம் என்றார். எனக்கு இதுவரை ஆச்சர்யமாகவே இருக்கிறது. காவலர் ஒருவரே எனக்கு சல்யூட் அடிப்பது.. ஒருமுறை ரயிலில் மதுரைக்கு பயணித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு ரெயில்வே போலிஸ்காரர் எனக்கு சல்யூட் வைத்ததும் நினைவுக்கு வருகிறது. புளிப்பு மிட்டாய் நிறைய வாங்கலாம் போலிருக்கிறதே...