"குருட்டுப்பூனை செத்த எலியைத்தான் பிடிக்கும்."
"பெண் எடுத்தல் பக்கத்திலும், களவாடுதல் தூரத்திலும் இருக்கவேண்டும்."
"ஆகாயத்திலிருந்து ஈச்சம்பழம் விழுந்தால் நீயும் வாயைத் திற."
நான் சமீபத்தில் ரசித்துப் படித்த ஒரு சிறுகதை, ஷோபா சக்தியின் “ எம்ஜியார் கொலைவழக்கு” சிறுகதைத்தொகுப்பில் இடம்பெறும் நைஜீரிய எழுத்தாளர் மம்முடு ஸாதி எழுதிய “Monsieur Mudulinka” என்கிற கதையின் மொழிபெயர்ப்பான ”திரு. முடுலிங்க” என்ற கதை. படிக்கும்போது அ. முத்துலிங்கம் அவர்களின் எழுத்தை நியாபகப்படுத்தும் நடை, நகைச்சுவை உணர்வு, நிதானம். அந்தக் கதையில் வரும் சில சுவாரசியமான பழமொழிகள் இவை.