ஒரு புதூ கதை சொல்லட்டா...
மாணவர்கள் விற்பனை. செம்ம லாபம்.
ஃபெயிலாகிவிடுவார்களோ எனும் நிலையில் இருப்பவர்கள் மட்டுமே ட்யூஷன் போனது அப்போ.
இது இப்போ. நல்லா படிக்கிற பசங்களும் ட்யூஷன் போகும்படி தள்ளப்படுறாங்க. இதுவும் உங்களுக்குத் தெரியும்.
சரி. நிற்க.
குப்புசாமி ரொம்ப நல்லா படிக்கிற ஒரு மார்க் மெஷின். அவன் ஒரு ட்யுஷன் செண்டரில சேர்கிறான்.
எல்லாருக்குமே தெரியும் அவனால் அதிக மதிப்பெண் மட்டுமே எடுக்க முடியும்ன்னு.
இப்ப அவன பத்தி தெரிஞ்ச அவனோட ட்யூஷன் செண்டரு ஓனர்....(கவனிங்க டீச்சர்ன்னு சொல்லல)..
“அடேய்.. குப்பு சாமி, நீ (இன்னொரு செண்டரு பேர சொல்லி) அவங்க வைக்கிற ஸ்காலர்ஷிப்பு பரிட்சை எழுது அதுல 75 சதவீதம் வாங்கினா அவங்க உனக்கு லம்ப்பா பத்தாயிரம் தருவாங்க.” (நா ரொம்ப நல்லவனாக்கும்)
அப்டீயே வண்டிய எடுத்துக்கிட்டு அந்த இன்னொரு செண்டருக்குப் போயி...
”எங்க செண்டரில குப்புசாமி படிக்கிறான். அவன் நிச்சயம் 98%எடுத்திடுவான் எங்ககிட்ட படிச்சாலும், படிக்காட்டாலுமே. அவன உங்க பரிட்சை எழுத சொல்றேன். அதுல அவன் ஜெயிச்சதும் (அதுல வேற உள்குத்து உண்டு) அவனுக்க்கு பத்தாயிரம் தந்திடணும். அவன உங்க பரிட்சை எழுத வைக்க எனக்கு ஒருலட்சம் தந்திடணும். ஏன்னா அவன் அதிக சதவீதத்தில ஜெயிச்சதும் உங்க இன்ஸ்ட்யூட் ஸ்காலர்ஷிப் கிடைச்சது, உங்க இன்ஸ்ட்யூட் உதவி கிடைச்சது எல்லாத்தையும் அவன் படத்த போட்டு நீங்க விளம்பரப்படுத்திக்கிடலாம்.”
ஆகா, குப்புவின் மூளையை வைத்து, செண்டர் ஒண்ணூ, செண்டர் ரெண்டு இருவருக்கும் பெயர். அவன் அப்பாவுக்கு தன் பையன் பேருல ரெண்டு செண்டர் விளம்பரப்படுத்தி ஊர் பூரா தட்டி வைப்பாங்க கொஞ்சம் பீத்திக்கலாம்.
குப்பு..? பாவம் அவன் அடுத்த செட்டு மனப்பாடம் பண்ணோணுமில்லா? அத பேப்பரில வாந்தி எடுக்கணுமில்லா?