இன்று கோயம்பேடு பக்கம் போயிருந்தேன். அஜித், விஜய், சிவகார்த்திகேயன் போஸ்டர்களை எல்லாம் பார்த்து ஒரு பிச்சைக்காரன் அசிங்க அசிங்கமாக திட்டிக் கொண்டிருந்தான். "...தா.. நாசமாப் போறவனுக... சும்மா போஸ்டர்ல உக்காந்துட்ருக்கானுங்க... இந்த போஸ்டர் நகர கூட மாட்டேனுது. ஆனா கோடி கோடியா சம்பாரிக்கிறானுவ... நான் நாயா 'உழைச்சு' பிச்சை எடுக்குறேன். தட்டுல ஒன்னும் விழ மாட்டேன்னுது.... என்ன ஒலகமோ..." என்று. என்னடா இவன் வித்தியாசமான க்ரியேச்சரா இருக்கானே என யோசித்தபடியே முகநூலைத் திறந்தேன். மனுஷ்யபுத்திரனை, கிளிமூக்கு அரக்கனை, என்னை, யுவகிருஷ்ணாவை, உமாவை எல்லாம் இதே ஸ்டைலில் ஒருவர் திட்டியிருந்தார். அட, பிச்சை எடுப்பவர்களுக்கு கூட எட்டும் அளவுக்கு இணையம் மலிவாகிவிட்டதே என மகிழ்ந்தபடியே கிளிமூக்கு அரக்கனிடம், "ஏன் சார் இவன்லாம் நம்மளைத் திட்றானே சார்?" என்றேன். அவர், "சார்.. அவன் திட்டுனா திட்டுட்டிப் போறான் சார். ஆனா, முதல்ல வரவேண்டிய என் பேரை இரண்டாவது போட்ருக்கான். உங்க பேரு இரண்டாவதா வந்திருக்கனும். ஆனா உங்க பேர மூணாவதா போட்ருக்கான். என்ன பிச்சக்காரன் சார் இவன்? கொஞ்சம் கூட சென்சே இல்லாம?" எனக் கோபமாகப் பேசினார். அடுத்தமுறை கோயம்பேடு பக்கம் போனால் கிளிமூக்கு அரக்கனின் அதிகார வரிசையை பிச்சைக்காரரிடம் சொல்லவேண்டும்.