சுஜாதா விருதுகள் 2015
சுஜாதா அறக்கட்டளை - உயிர்மை இணைந்து வழங்கும்
சுஜாதா விருதுகள் 2015
தமிழின் நவீனத்துவத்திற்குப் பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாகஅவரது பிறந்த தினமான மே 3ஆம் தேதி இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து 6 விருதுகள்வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் பாராட்டுப் பத்திரமும்கொண்டது.
1. சுஜாதா சிறுகதை விருது : சிறந்தசிறுகதைத் தொகுப்பிற்கு
2. சுஜாதா நாவல் விருது : சிறந்தநாவலுக்கு
3. சுஜாதா கவிதை விருது : சிறந்தகவிதைத் தொகுப்பிற்கு
4. சுஜாதா உரைநடை விருது : சிறந்தகட்டுரைத் தொகுப்பிற்கு
5. சுஜாதாஇணைய விருது : சிறந்த வலைப்பதிவு (Blog),
Face book பதிவர் அல்லது இணைய இதழுக்கு (website)
6. சுஜாதா சிற்றிதழ் விருது : சிறந்தசிறுபத்திரிகைக்கு
விதிமுறைகள்:
1. முதல் நான்கு பிரிவுகளில்2013டிசம்பர் முதல் 2014 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வெளிவந்த நூல்களில் 4 பிரதிகள் அனுப்பப்படவேண்டும்.எழுத்தாளரோ, பதிப்பாளரோ அல்லது வாசகர்களோகூட நூல்களை அனுப்பலாம். எழுத்தாளரைப் பற்றிய தகவல்கள் மற்றும் முகவரிதனித்தாளில் எழுதி நூல்களுடன் அனுப்பவும். நூல்களில் எதுவும்குறிப்பிடவேண்டியதில்லை.
2. 5ஆவது பிரிவில் தமிழின்சிறந்த வலைப்பதிவு, Face book பதிவர் அல்லது இணையத்தளத்திற்கு வழங்கப்படும். அந்தஇணையத்தளத்தை, Face book பதிவை அல்லது வலைப்பதிவை நடத்துபவர்கள் தம்மையும் தமதுஇணைய பக்கங்களையும் பற்றிய சிறு குறிப்புடன் 2014இல் வெளிவந்த முக்கியமானஆக்கங்களின் பத்து சுட்டி (link) களையும் அனுப்ப வேண்டும்.அனுப்பவேண்டிய முகவரி: sujathaawards@gmail.com
3. 6ஆவது பிரிவில் தமிழில் 2014&ஆம் ஆண்டு வெளிவந்த சிற்றிதழ்களிலிருந்து பிரதிகள்அனுப்பப்படவேண்டும். அந்த ஆண்டில் குறைந்தபட்சம் மூன்று இதழ்களாவதுவெளியிடப்பட்டிருக்க வேண்டும். அந்த ஆண்டில் வெளிவந்த ஒவ்வொரு இதழிலிருந்தும் 4 பிரதிகள் வீதம் அனுப்பவேண்டும்.
4. விருதுக்குரிய தேர்வுகள் தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் மற்றும்பத்திரிகையாளர்களால் மேற்கொள்ளப்படும்.
5. தேர்வுக்கான விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி:
மார்ச் 10, 2015.
6. விருதுகள் மே 3, 2014&ஆம் தேதி சுஜாதாவின் பிறந்த தினத்தில் வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:
சுஜாதா விருதுகள், உயிர்மை
11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை &-600 018.
மின்னஞ்சல்: sujathaawards@gmail.com. தொலைபேசி : 91-44-24993448