Sunday, March 29, 2015

Kamba Ramayanam, Karl Marx and Naxal Lawyers


உண்மைகள்

எதுசரி எதுதவறு என்று நாம் முடிவு செய்யுமுன் ஆயுள் முடிந்துவிடுகிறது ,அல்லது சமூக நியதிகளே மாறிவிடுகின்றன . 1853ம் ஆண்டில் கார்ல் மார்க்ஸ் என்ற அறிஞர் ஜெர்மனியில் சிந்திக்கவும் எழுதவும் வாய்ப்பின்றி இங்கிலாந்தில் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் உட்கார்ந்து டாஸ்காபிடா என்ற , அவருடைய பரம எதிரிகள்கூட மறுத்தாலும் மறக்கமுடியாத , ஒரு
நூலை எழுதி வைத்தார்.

அதைப் முழுவதும் புரிந்துகொள்ள முடியாத வயதில்
நான் படித்துவிட்டு , உலகத்தைக் காக்க எழும்பிய
சீ குவேரா ரசிகனாக ஆரம்பித்து வங்காள நக்ஸல் பாரியில்
சாறு மஜூம்தார் தொண்டனாக வளர்ந்தேன் . வழக்குரைக்கும்
தொழிலில் சேர்ந்த பிறகு சட்டமும் இடதுசாரி அரசியலு  
ஒன்றுக்கு ஒன்று முரணாகத் தோன்றியதில் ஒருசுயநல
வாதியாக அரசியலை இரண்டாம் பட்சமாகக்கொண்டேன் .
இடது சாரி சிந்தனை 1962ல இர்ண்டாக பிரிந்ததும்  
சிறை செல்வதைத் தவிர்க்க சோஷலிசப்போர்வையை  
போற்றிக் கொண்டு கம்யுனிஸ்ட் நண்பர்களை மட்டும்  
நண்பர்களாகவே வைத்துக் கொண்டு கட்சியைவிட்டு  
விலகினேன் .

ஆதிசங்கரரின் "பஜகோவிந்தம் மூட மனமே " 
என்ற கருத்து என்னை அவ்வளவாக ஆட்கொள்ளவில்லை . 
ஆனாலும் அவர் சொன்ன "மரணத்தைத் தழுவும்போது  
இலக்கணம் மறைந்து விடுகிறது " என்ற வடமொழிக்  
கவிதையின் தமிழாக்கம் என்னை ஈர்த்தது .

பின்னால் அதேபெயர் கொண்ட மதத்தலைவரை 
தமிழக காவல்துறை ஒரு கொலை வழக்கில் கைது 
செய்தபோது தெய்வத்துக்கு என்றும் கட்டுப்படாத என்  
மனச்சாட்சி தமிழக அரசுக்கு நன்றி செலுத்தியது . 
ஒரு தொலைகாட்சி நிறுவனம் அதை பதிவு செய்து 
என்னை பல சுத்தப் பிராமணர்களின் "பிடி சாபம் "
என்ற வசைக்கு ஆளாகியது . இதையெல்லாம் ஏன் 
வெளியே சொல்கிறாய் ? என்று கேட்காதீர்கள் . என்  
சிந்தனைகள் நான் இறந்தவுடன் என்னுடன் புதைபடவோ  
எரிக்கப் படவோகூடாது என்பதற்காகத்தான் .

நான் நடிகனாவதற்குமுன் வழக்குரைப்போனாக 
செயல்படும்போது நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் 
அறிவுலகம் போற்றும் நடிகனாகவும் திரு எம் .ஜி .ஆர் . 
அவர்கள் ஒரு கெட்டிக்கார அரசியல் வாதியாகவும்  
போற்றப் பட்டார்கள் . அப்போது நான் இராமநாதபுரம் 
மாவட்டத்தில் சுதந்திர இந்தியாவிலே குற்ற சட்டத்தை 
மீறுபவர்களை தக்க தண்டனையிலிருந்து தப்பவைக்கும்  
குறுக்குவழியை தேடி , சிந்தித்து செயல்பட்டுக் கொண்டு 
இருந்தேன் . 

அதன்பின் எத்தனையோ நிகழ்வுகள் ! என்னுடைய  
சுயசிந்தனை ஆண்டுகளில் கேட்டுச் செரிமான்மாகாத
கணக்கில் அடங்காத பொய்கள் . அதற்கு முன் ஐந்து ஆண்டு 
காலம் கல்லூரி செல்லும்வரை , என் சுயதயாரிப்பில் சில 
கணிசமான பொய்கள் தற்காப்புக்கும் சுயலாபத்துக்கும் 
தேவைப்பட்டன .  
அதன்பின் ஆங்கிலமுறை சட்டம்படித்து ,
குற்றவியல் நடைமுறை சட்டத்தால் அனுமதிக்கப் பட்டு ,
விவாதத்தில் அழகாக தொடுக்கப்பட்ட தொழில் -பொய்கள் !

ஆறுநூரு சகடத்தடிசிலும்  
நூருனூரு குடங்களும் நுங்கினான்  
ஏறுகின்ற பசியை எழுப்பினான்  
சீறுகின்ர செங்கண் முகத்தினான் .

என்ற கம்ப இராமாயண அடிகளை படித்தாலும்  
புரிந்துகொள்ள முடியாத…. , சேது கால்வாயை எதிர்க்கும்  
பக்தர்களுக்கு பாதம் பணிந்திருக்கிறேன் .

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி 
துப்பார்க்குத் துப்பாயது(உ) மழை 

என்பது எ .கே . 47 பற்றி எழுதப்பட்டது விளக்கம்கூறி 
முக்காபலாவையும் முஸ்தபாவையும் தூய தமிழாக்கி , தம் 
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று உப்புக்குச் 
சப்பாணி உயில் எழுதியவர் களுக்கும் மரண சாஸனம்  
தயாரித்து அதன் எழுத்து `மூலவர் ' என்று எனக்கு  
நானே பட்டமும் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன் .