Tuesday, March 3, 2015

Uthama villain music review

உத்தமவில்லன்

சினிமா விமர்சனம் செய்யவேண்டாம் என்று ஒரு சுயகட்டுப்பாடு. ஆனால்...ம்...ம்..அதனால் பாடல், இசை விமர்சனம். கமல் தன் வழக்கம்போல் தலையை நுழைத்து குழப்பினாலும் கிப்ரன் தெளிவாக , திட்டமிட்டு செய்திருக்கிறார். நிச்சயம் தமிழ் சினிமா இசையில் ஒரு முக்கியமான புதிய முயற்சி. ஒரு கட்டுக்குள் அடங்காததாலேயே எதிர்பாராத இனிமையான இசைத் தாக்குதல். நம்முடைய கவலையெல்லாம் ரமேஷ் விநாயகத்தை மறந்ததுபோல் கிப்ரனை மறக்காமல் இருக்க நரசிம்மமூர்த்தி அருள் புரிவாராகுக! 

தேவி ஸ்ரீப்ரசாத் போன்ற மைக் செட் ஆசாமிகளைக் கழட்டிவிட்டு, ஷங்கர்-எஹ்சான்-லாய் போன்ற போலி பிரம்மாண்டங்களைக் கைவிட்டு நல்ல இசையமைப்பாளர் பக்கம் சென்றதற்கு வரவேற்போம். இளையராஜாவின் மீதம்போல் கேட்டாலும் காதலா கடவுளா நல்ல ட்யூன். நன்றாகப் பாடப்பட்டுள்ளது. இரணீயன், முத்தரசன் கதை இரண்டுமே இசையமைப்பாளரின் கற்பனைக்குச் சான்று. ஓபரா பாணியில் இசை. பாடல் வரிகளில் மரண வாசனை அடித்தாலும் வைரமுத்து இல்லையாம்! தோல்விக்கு முற்றுப்புள்ளியாய் மரணத்தை எதிர்நோக்குவது போல் வரிகள். 

இந்தப் பாடல்களை கெடுக்காமல் எடுத்தாலே ஒரு சுமாரான படம் தேறிவிடும்.