Sunday, March 15, 2015

Book Reviews: Sangam Poetry: Orambhogiyaar: AK Ramanujan: Translations


சங்கக் கவிஞர்களில் ஓரம்போகியார் படு நக்கல் பேர்வழியாக இருந்திருக்க வேண்டும் என்று அவருடைய வேழப்பத்து பாடல்களைப் (ஐங்குறுநூறு) படிக்கும்போது எனக்குத் தோன்றும். அவருடைய உவமைகளில் உள்ளார்ந்த அங்கதம் இழையோடுவதை தமிழ்க் கவிதைகளின் வாசிப்பின்பத்திற்கு அடிப்படை என நான் நினைப்பதுண்டு. வேழப்பத்து பாடல்களில் வேழம் என்பது ஆற்றங்கரையில் கரும்பு போல் வளரும் பேய்க்கரும்பு. வேழத்தை வயலைக் கொடி சுற்றும். வேழம் கரும்பு போல் பூக்கும். அதன் பூ வெண்குதிரையின் பிடரிமயிர் போல இருக்கும். வேழம் வளர்ந்து அருகிலுள்ள மாந்தளிரை மடக்கும். புனலாடும் மகளிர் புணர மறைவிடமாகி உதவும். அப்போது அவர்களின் நெற்றிக் குங்குமம் அதன் வேரில் ஒட்டிக்கொள்ளும். அதன் பூ வானத்தில் பறக்கும் குருகின் சிறகு போல் இருக்கும். செருந்திப் பூவோடு வேழம் மயங்கிக் கிடக்கும். உதிர்ந்த மாம்பூ புணர்ந்தோர் உடம்பு மணம் கமழ, அதன்மேல் வேழப்பூ உதிர்ந்து மணத்தை மறைக்கும்.மாம்பூவில் மொய்க்கும் வண்டின் சிறகு போல் பூக்கும் என்பவை பின்னணிச் செய்திகள். நிற்க.

தொடர்ந்த பிராயணங்களின் போது Martha Ann Selby இயின் ஐங்குறுநூறு கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை வாசித்து முடித்தேன். பார்க்க: http://www.amazon.com/Tamil-Love-Poetry-Ainkur…/…/0231150652அபாரமான மொழிபெயர்ப்புகள். ஏ.கே.ராமானுஜனின் மொழிபெயர்ப்புகளின் தரத்திலானவை. ஓரம்போகியாரின் வேழப்பத்தில் ஒரு கவிதைப்பத்திக்கு மார்த்தா அன் செல்பியின் மொழிபெயர்ப்பு 

“That man from the lush riverbank
where the row of reed flowers
chafes the fertile shoots of the nearby mango tree with its green fruit-

his chest makes a cool bed full of sweet grace “ 

ஆனால் இதில் ஓரம்போகியாரின் அங்கதம் எங்கே எப்படி காணாமல் போயிற்று?

Like ·  ·