Sunday, March 8, 2015

Director Cheran's C2H: Tamil Films Distribution Channel: JK: Films and Movies


மதியம் எங்க தெருவில் இரண்டு பேர் முகத்தில் கர்ச்சீஃப் கட்டியபடி வெயிலில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். முதலில் அது என்னவென்று கவனிக்கவில்லை. இருவரும் பைக்கில் வந்திருந்தார்கள். போஸ்டர் ஒட்டுவதில் அனுபவம் இல்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது. போஸ்டர் ஒட்டும்போதுகூட யாராவது திட்டுவார்களோ என்ற பதட்டத்தோடு இருந்தமாதிரிதான் இருந்தது..

சாயந்திரமாக எங்க சின்னாவை வாக்கிங் கூட்டிக் கொண்டு போகும்போதுதான் கவனித்தேன் அது சேரன் அறிமுகம் செய்துள்ள C2H திட்டத்தின் விளம்பர போஸ்டர். ஆஹா.. ஐந்தாம் தேதி வெளியீடு முடிந்து நாம் இன்னும் சிடி வாங்கவில்லையே.. என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். பக்கத்து வீட்டு நண்பன் நந்துவும் Nandha Gopal இன்னும் வாங்கவில்லை என்று சொன்னான். அப்ப ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு காப்பி வாங்குவோம் என்று பேசிக் கொண்டு C2H காரர்களுக்கு போன் செய்தேன். ரிங் போகும்போதுதான் இன்று ஞாயிறு என்பது நினைவுக்கு வந்தது. அதற்குள் போனை எடுத்துவிட்டார்கள். இரண்டு காப்பி CD வேண்டும் என்று சொன்னேன். உடனடியாக வீடு தேடி வந்து டெலிவர் செய்துவிட்டார்கள். அடுத்து என்ன படம் வரப் போகிறது? என்று கேடடதற்கு ரெண்டு நாள்ல தகவல் சொல்றேன் சார் என்றார். நாங்க எப்புடி தெரிஞ்சுக்குறது என்று கேட்டபோது உங்க போன் நம்பர் இருக்கு. அதுக்கு போன் பண்ணி சொல்றேன் என்றார். 

அட எதுக்குங்க இவ்வளவு செலவழிக்கணும்? அதான் way to sms இருக்குல்ல? அதுல எத்தனை SMS அனுப்பினாலும் ஃப்ரீதானே..? எங்க யூனியன்ல கூட அது மாதிரி ஒரு அமைப்புலதான் மெசேஜ் அனுப்புவாங்க என்றேன். எந்த யூனியன் சார்? என்றார் அந்த நண்பர். நான் அசிஸ்டண்ட் டைரக்டர்ங்க.. எங்க இயக்குநர் சங்கத்தைத்தான் சொன்னேன். என்றேன். 

அவர் புன்னகையோடு, நானும் அசிஸ்டண்ட் டைரக்டர்தான் சார். என்றார். ஒரு கணம் கட்டிக் கொள்ளலாம் போல உணர்ந்தேன். 

(சாலிகிராமம் நண்பர்கள் இந்த எண்ணுக்கு போன் பண்ணினால் வீடு தேடி படங்கள் வரும்.. பயன்படுத்திக் கொள்ளுங்கள். எண் : 9444811857)

படம் இனிமேல்தான் பார்க்க வேண்டும்.. படம்பற்றி வேறொரு நாளில்..

'மதியம் எங்க தெருவில் இரண்டு பேர் முகத்தில் கர்ச்சீஃப் கட்டியபடி வெயிலில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். முதலில் அது என்னவென்று கவனிக்கவில்லை. இருவரும் பைக்கில் வந்திருந்தார்கள். போஸ்டர் ஒட்டுவதில் அனுபவம் இல்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது. போஸ்டர் ஒட்டும்போதுகூட யாராவது திட்டுவார்களோ என்ற பதட்டத்தோடு இருந்தமாதிரிதான் இருந்தது..

சாயந்திரமாக எங்க சின்னாவை வாக்கிங் கூட்டிக் கொண்டு போகும்போதுதான் கவனித்தேன் அது சேரன் அறிமுகம் செய்துள்ள C2H  திட்டத்தின் விளம்பர போஸ்டர். ஆஹா.. ஐந்தாம் தேதி வெளியீடு முடிந்து நாம் இன்னும் சிடி வாங்கவில்லையே.. என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். பக்கத்து வீட்டு நண்பன் நந்துவும் @[100001088587220:2048:Nandha Gopal] இன்னும் வாங்கவில்லை என்று சொன்னான். அப்ப ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு காப்பி வாங்குவோம் என்று பேசிக் கொண்டு C2H காரர்களுக்கு போன் செய்தேன். ரிங் போகும்போதுதான் இன்று ஞாயிறு  என்பது நினைவுக்கு வந்தது. அதற்குள் போனை எடுத்துவிட்டார்கள். இரண்டு காப்பி CD வேண்டும் என்று சொன்னேன். உடனடியாக வீடு தேடி வந்து டெலிவர் செய்துவிட்டார்கள். அடுத்து என்ன படம் வரப் போகிறது? என்று கேடடதற்கு ரெண்டு நாள்ல தகவல் சொல்றேன் சார் என்றார். நாங்க எப்புடி தெரிஞ்சுக்குறது என்று கேட்டபோது உங்க போன் நம்பர் இருக்கு. அதுக்கு போன் பண்ணி சொல்றேன் என்றார். 

அட எதுக்குங்க இவ்வளவு செலவழிக்கணும்? அதான் way to sms இருக்குல்ல? அதுல எத்தனை SMS அனுப்பினாலும் ஃப்ரீதானே..? எங்க யூனியன்ல கூட அது மாதிரி ஒரு அமைப்புலதான் மெசேஜ் அனுப்புவாங்க என்றேன். எந்த யூனியன் சார்? என்றார் அந்த நண்பர். நான் அசிஸ்டண்ட் டைரக்டர்ங்க.. எங்க இயக்குநர் சங்கத்தைத்தான் சொன்னேன். என்றேன். 

அவர் புன்னகையோடு, நானும் அசிஸ்டண்ட் டைரக்டர்தான் சார். என்றார். ஒரு கணம் கட்டிக் கொள்ளலாம் போல உணர்ந்தேன். 

(சாலிகிராமம் நண்பர்கள் இந்த எண்ணுக்கு போன் பண்ணினால் வீடு தேடி படங்கள் வரும்.. பயன்படுத்திக் கொள்ளுங்கள். எண் : 9444811857)

படம் இனிமேல்தான் பார்க்க வேண்டும்.. படம்பற்றி வேறொரு நாளில்..'