Thursday, March 5, 2015

Scientist Sir CV Raman: Puthagam Pesudhu: interviews

மத சடங்குகளிடமிருந்து மனிதனை மீட்கவே அறிவியல்!

சர். சி.வி. ராமன் நேர்காணலிருந்து

2014 இந்தியாவின் தலைசிறந்த அறிவியலாளர் 
சி.வி.ராமன் பிறந்த 125வது ஆண்டாகும். திருவானைகோயிலில் 1888ல் நவம்பர் 7, அன்று ஒரு ஆசிரியருக்கு மகனாகப் பிறந்தார் சந்திரசேகர வெங்கடராமன். பத்து வயதிற்குள் ஆயிரம் புத்தகங்களை படித்தவர் என்று பிற்காலத்தில் லண்டன் ராயல் கழகம் ராமனை அறிமுகம் செய்தது. பதினோறு வயதில் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு அமர்ந்த அந்த இளம் புயல், சென்னை பிரெசிடென்சி கல்லூரி வழியே அன்றைய பி.ஏ. எம்.ஏ. பாடப்பிரிவுகள் உலகளாவிய அளவில் வழங்கிய தங்க பதக்கங்களை எளிமையாக சுவீகரித்து, கல்லூரி முடிக்கும் முன் அறிவியல் ஆய்வு கட்டுரைகள் உலகளாவிய அறிவியல் ஏடான பிலாசபிகல் மெகசீன் (Philosophhical Magazine) இதழ் உட்பட வெளிவந்து, 'டியர் சயின்டிஸ்ட் ராமன்' என அன்றைய விஞ்ஞான உலகின் ஜாம்பவான் லார்டு ராலே எழுதியபோது ராமனுக்கு வயது 18 தான். ஆங்கில அரசின் ஐ.எஸ்.எஃப் தேர்வு எழுதி முதலிடம் பிடித்து கொல்கத்தா மாகாணத்தின் தலைமை கணக்காயராய் பணியமர்ந்து, மஹேந்திரலால் சர்க்கார் உருவாக்கிய இந்திய அறிவியல் கழகம் (Indian Association for the cultivation of science) பற்றி எதேச்சையாக அறிந்து தனது அறிவியல் கனவை விதைத்த ராமன், அதற்காக வேலையை துறந்து பேராசிரியராகி Ôராமன் விளைவைÕ உலகிற்கு அறிவித்தார். ஒளி சிதறல் என்பது திரவங்களின் அணுக்கூறுகள் மீதான ஒளியின் பதிவு, திரவத்திற்கு திரவம் மாறுபடுகிறது என்பதை நிறமாலை வரைபடத்தின் வழிநின்று உலகம் அறிந்தது என்பது இன்றைய தொலைகாட்சியிலிருந்து 3G வரை பலவற்றை சாத்தியமாக்கியது. இந்தியாவின் ஒரே நோபல் (அறிவியல்) பரிசு 1930ல் ராமன் பெற்றதுதான். ஏனைய இந்திய அறிவியல்) நோபல்களின் அடிப்படை ஆய்வுகள் இங்கே நிகழ்த்தப்பட்டவை அல்ல. இந்திய விடுதலைக்கு முன் ஆங்கிலேய அரசு ராமனுக்கு தொடர்ந்து பல்வேறு மறைமுக முட்டுக்கட்டைகளை போட்டது என்றால் சுதந்திரத்திற்குபிறகு நேரு அரசோடு அவரால் ஒத்துப்போக முடியவில்லை. இறுதிவரை மைய அரசிடமிருந்து எந்த உதவித் தொகையும் பெறாமலேயே தனது ராமன் கல்வியகத்தை கட்டமைக்க போராடியவர் ராமன். ராமனின் பகுத்தறிவு, புரட்சிகரசிந்தனை, ஜி.டி. நாயுடு வரை பலரிடம் அவர் நேசம் கொள்ளச் செய்தது. ஆட்சி அதிகார படிநிலைகளாக அறிவியலாளர் வேலை இந்தியாவில் மாறியதை இறுதிவரை எதிர்த்தது என பலவற்றை பற்றி திறந்த அரங்கங்களில் பேச கூசாதவராய் அவர் இருந்தார். தி டைம்ஸ் (லண்டன்) இதழ் தொடங்கி, மும்பை அசோசியேட் பிரஸ், சென்னை ஐ.டி.ஐ. ஜி.டி. நாயுடுவின் கோவை தொழில்நுட்ப கல்லூரி என திறந்த அரங்குகளில் இளைஞர்களின் கேள்விகள் என ராமன் எதிர் கொண்ட நேர்காணல்கள், ராமன் கல்வியகத்தின் இணையதளத்தில் உள்ளன. அவற்றில் பிரதானமானவற்றை தேர்ந்தெடுத்து வழங்குகிறேன். அறிவியல் செயல்பாடுகள் வெறும் ஆய்வகத்தோடும் பதவி உயர்வோடும் மட்டும் சம்பந்தப்படாமல் சமூக விழிப்புணர்வோடு நல்கியுள்ளதை இந்திய மண்ணிற்கே தன்னை முழுமையாக அற்பணித்த விஞ்ஞானி ராமனின் ஒரே நோக்கமாக இருந்ததை இந்த நேர்காணல் பதிவு செய்கிறது.
நன்றி: www.rri.res.in/
தமிழில்: இரா.நடராசன்

கேள்வி: 'பாரத ரத்னா' விருது பெறுவதற்கு நீங்கள் ஏன் நேரில் செல்லவில்லை? (ஐ.ஐ.டி.சென்னை)

பதில்: இதற்கான பதிலை நண்பர் ராஜேந்திர பிரசாத்திற்கு அனுப்பினேன். பலமுறை சொல்லியாகி விட்டது. இந்திய ஜனாதிபதி மாளிகை ராணுவ நேர்முக உதவியாளருக்கும்கூட ஒரு பிரதி அனுப்பினேன். இங்கே (பெங்களூரில்) வேலைகள் அப்படி எனது முனைவர் பட்ட மாணவர் ஒருவரின் ஆய்வுகள் எனது சொந்த ஆய்வுகள் என பல பணிகள். ஒரு ஆசிரியராக ஆய்வகத்தின் முனைவோர் வழிகாட்டியாக எனது கடமையை விடுத்து புதுதில்லி செல்ல மனம் ஒப்பவில்லை.

கே:உங்களது ராமன் கல்வியகத்திற்கு அரசு உதவி தேவை என கேட்கப்பட்டால் பணம் ஒதுக்க தயாராக இருப்பதாக நேரு அரசு அறிவித்தும் அவ்விதம் கோராதது ஏன்? (அசோசியேட் பிரஸ்)

ப: எத்தனையோ முறை விண்ணப்பம் வழங்கியும் நடக்கவில்லை. ராமன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் ((Raman research institute) முதல் மூன்று வருடங்கள் மின்சார இணைப்பு பெறக்கூட போராட வேண்டி வந்துள்ளது. அதிகாரிகள் அறிவியலை வளர்க்க முடியாது. அறிவியலாளர்கள் அதிகாரிகளாக இருக்கவும் முடியாது. கல்வியகங்களில் வேண்டுமானால் நிர்வாக பதவிகள் இருக்கலாம். நான் நிதி கேட்டு அதிகாரிகளிடம் இறைஞ்சமாட்டேன். பெங்களூரில் மேகமற்ற திறந்த வானுக்கும், ஒளி கற்றை ஆய்வுகளை மேற்கொள்ள திறந்த வெளிக்குமா குறைச்சல்? தற்போது அவர்களது (நேருஅரசு) வழி எனக்கு உடன்பாடு இல்லை. என் ஆய்வுகளுக்கும் கல்வியகத்தின் உலகதரம் வாய்ந்த செயல்பாடுகளுக்கும், போலராய்டுகள், விலை உயர்ந்த ஆடிகள், ஒரு ஹீலியோஸ்டட் சில வகுப்பறைகள் இப்படி படிப்படியாக நண்பர்கள் உதவியோடு உள்நாட்டில் நமது விஞ்ஞானிகளால் தயாரிக்க முடிவதை நான் கட்டமைக்கிறேன். அவர்கள் நமது இளைஞர்களால் நமது நாட்டிலேயே கட்டமைக்க முடிந்தவற்றை அமெரிக்காவிடமிருந்தும், ஜெர்மனியிலிருந்தும் இறக்குமதி செய்வதைதான் அறிவியல் வளர்ச்சி என்கிறார்கள். இறக்குமதியான அதீத விலை பிடித்த கருவிகள் மூலமே 
அறிவியல் ஆய்வுகள் சாத்தியம் என்பதுபோல கட்டமைக்கப்படும்போது ஊழலே வளரும். அறிவியல் வளராது. ஐயாயிரம் ரூபாயில் நமது அறிவியலாளர்களால் கட்ட முடிந்த, சுயமாக உருவாக்க முடிந்த ஒரு கருவியை, ஐம்பதாயிரம் செலவு செய்து அமெரிக்காவிலிருந்து வரவழைத்தால் அதற்கு இரண்டு அர்த்தம் உள்ளது. ஒன்று மீதி பணம் உங்கள் அறியாமைக்கு நீங்கள் கொடுத்த விலை. இரண்டாவது தான் என்னை மிகவும் கவலை கொள்ள வைக்கிறது. இப்படியே இறக்குமதி அறிவியல் தொடர்ந்தால் நமது இளைஞர்கள் புதிய கருவிகளை கண்டுபிடிக்க மாட்டார்கள், ஏற்கெனவே எங்கோ ஒரு நாடு கண்டுபிடித்து தரும் கருவிகளை இயக்க மட்டுமே கற்பார்கள். நான் அந்த வலையில் விழ விரும்பவில்லை.

கே: உங்கள் ராமன் விளைவு கண்டு பிடிப்பு எப்படி நிகழ்ந்தது என்பதன் பின்னணியை விளக்க முடியுமா? (அகில இந்திய வானொலி) 

ப: எல்லாம் 1907ல் தொடங்கியது. அந்த கண்டு பிடிப்பு எப்படி நிகழ்ந்தது என்பதை விளக்கும் முன் Ôராமன் விளைவுÕ என்றால் என்ன வென்று இந்த வானொலி மூலம் எனது நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க விரும்புகிறேன். இப்படியான வாய்ப்பு இதுவரை கிடைக்காத ஒன்று. 1905ல் ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் ஒளி ஃபோட்டான்களால் (துகள்) ஆனது என்று அறிவிக்கிறார். பொதுவாக ஒளி எந்த அணுவில் அல்லது மூலக்கூறில் பட்டு எதிரொளித்தாலும் அல்லது சிதறலுற்றாலும் அது நெகிழ் தன்மை கொண்ட போட்டான்களையே கொண்டுள்ளது. அந்த வேதிப் பொருளின் மூலக்கூறுகள் மீது விழுந்த போட்டான்களின் அதே அளவு ஆற்றல், ஒளிர்திறன், அலை நீளம் சிதறலுறும் போட்டானிலும் மாறாது இருக்கும். இதற்கு ராலே சிதறல் என்று பெயர். திரவங்களின் மீது இதே போட்டான் சிதறல் உண்மையா என்பதுதான் எனது சோதனை. அதில் என் மாணவரும் சகாவுமான கே.எஸ். கிருஷ்ணனும் மேலும் மூவரும் எனக்கு உதவினார்கள். ஏற்கெனவே திரவங்களின் போட்டான் சிதறல் நெகிழ் தன்மை அற்று இருக்கவே வாய்ப்பு அதிகம் என கோட்பாட்டு இயற்பியலாளர் ஏ.ஸ்மெக்கல் 1923ல் விளக்க முயன்றிருந்தார். கண்டிப்பாக திரவ அணுக்கள் மீதான ஒளி சிதறல் கூடுதல் அல்லது குறை ஆற்றல் பெற்ற போட்டான்களையே வெளியிடும் என நான் நம்பினேன். இத்தகைய ஆற்றல் நிலையில் ஏற்படும் மாற்றத்தை கொண்டு திரவங்களின் பல்வேறு வேதி தன்மைகளை ஆராய்ந்து பயன்படுத்த முடியும். இந்த போட்டான் மாற்றத்திற்கு காரணத்தையும் எனது ஆய்வு நிரூபித்தது. ஒரு திரவத்தின் மீது ஒளித்துகளான போட்டானை சிதறலுற வைத்து அதன் இயற் வேதி பண்புகளை பட்டியலிடலாம். 1928 பிப்ரவரி 28 அன்று நிகழ்த்தப்பட்ட இந்த கண்டுபிடிப்பு குறித்து எனது பதிவுகளை ஆங்கிலத்திலும் அதிலிருந்து ஜெர்மன் மொழியிலும் 1928 இறுதிக்குள் வெளியிட்டோம். பிளான்க் ஆற்றல் சமன்பாடு என்று பொதுவாக அழைக்கப்படும் ணி=லீக்ஷி (இங்கேரி பிளான்க் மாறிலி) என்பதை கொண்டு ராமன் விளைவிற்கு கணித நிரூபணமும் வழங்கமுடிந்தது. ஒரு திரவ அணு போட்டான் சிதறலால் ஆற்றல் பெறவும் முடியும். ஆற்றலை இழக்கவும் முடியும். இதிலிருந்து ராமன் நிறமாலை உட்பட பிற கண்டுபிடிப்புகள் நோக்கி நாங்கள் சென்றோம்.

கே: இப்போது நாம் 1907க்கு திரும்புவோமா... உங்களை இந்திய விஞ்ஞான கழகத்திடம் இணைத்த சம்பவம் பற்றி (அகில இந்திய வானொலி)

ப: அன்று ஞாயிற்றுக்கிழமை, நான் அப்போது கொல்கத்தா, ஜில்லா கணக்காய தலைமை பதவியில் இருந்தேன். அக்கவுண்ட்ஸ் ஜெனரல். நாள் நேரம் கணக்கு பார்க்க முடியாத கடும் அலைச்சல் தரும் வேலை. இந்தியன் அசோஷியேஷன். ஃபார் கல்டிவேட்டிங் சயின்ஸ்(Indian Association for Cultivating science) பற்றி ஏற்கெனவே அறிந்து இருந்தேன். எனக்கு என் வேலை தவிர பகுதி நேரத்தில் எனது ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு இடம் தேவையாக இருந்தது. இந்தியாவில் பிறந்த யாரும் அந்த காலத்தில் அறி¢வியல் ஆய்வுகள் செய்யுமளவு சுதந்திரமெல்லாம் ஆங்கிலேயர் தந்திருக்கவில்லை. பலரும் இப்போது சொல்வதுபோல மஹேந்திரலால் (சர்க்கார்) அந்த கழகத்தை தனித்து தொடங்கிவிடவில்லை. நாம் பாதிரியார் யுக்னி லபோர்ட் என்பவரை அதற்குள் மறந்துவிட்டோம். கொல்கத்தாவின் (செயின்ட்) சேவியர் கல்லூரி பேராசிரியர், இந்திய ராயல் கழகம் என்று பெயர் வைக்கவே அவர் ஆரம்பத்தில் விரும்பினார். ஆனால் முழுமையாக நிதி உதவி செய்து அதனை அறிவியல் ஆய்வகமாக மாற்றியவர் மஹேந்திரலால்தான். நான் நுழையும் போது அந்த மாமனிதர்கள் இல்லை. அவர்கள் இயற்கை எய்திருந்தார்கள். அன்று மதியம் சரியான மழை பெய்து கொண்டிருந்தது. பின் நாட்களில் எனது ஆய்வுகளில் அறிவியல் செயல்பாடுகளில் சகாவாக இருந்த ஆஷீபாபு எனக்கு சுற்றிகாட்டினார். அடுத்த முப்பதாண்டுகள் நான் ஏறக்குறைய தினமும் அங்கே என் அறிவியல் ஆர்வத்திற்கான தீனிபோட போகப் போகிறேன் என்பதை அப்போது நான் உணரவில்லை. இன்று இந்த 1963ல் நினைத்தால் மிகுந்த திருப்தி அளித்த அதே சமயம் கடும் சோதனையான நாட்கள் அவை. உலக அளவில் இந்திய அறிவியலை நாம் உயர்த்தி பிடித்த இடம் அது. அந்த பாவ் பஜார் வீதியில் அந்த நாட்கள் இப்போது நினைத்தாலும் பிரமிப்பு ஊட்டுகின்றன. கிருஷ்ணன் மட்டுமல்ல. சூரி (பகவந்தம்) வாஸ்த்தவன். மக்னாஷ் (சஹாரா) என பெரிய கூட்டத்தை அறிவியல் பக்கம் அழைத்துவந்த நாட்கள் அவை.

கே: சோவியத் யூனியனின் இரண்டு விஞ்ஞானிகள், ராமன் விளைவை அவர்கள்தான் முதலில் கண்டுபிடித்ததாக கூறுகிறார்களே? (டைம்ஸ் லண்டன்)

ப: சோவியத் இயற்பியலாளர்களான கிரிகரி லாண்ட்ஸ் பர்க் மற்றும் ஒளியியலாளர் லியோனாய்ட் மெண்டல்ஸ்டாம் இருவரும் எனது நண்பர்கள்தான். இன்று வரை கடிதத் தொடர்பும் உண்டு. அவர்களது ஆய்வுகள் கிரிஸ்டல். கற்களில் ஒளி சிதறலை விளக்குகின்றன. ராமன் விளைவு அதை கடந்தது. ஒலி அலைகள், சூப்பர் சானிக், ஸ்டோக்ஸ் வகை வைர கற்கள், அனைத்து நீர்ம வேதிப்பொருட்கள் என விரிவடைகிறது. தவிர போல்ட்ஸ்மென் மாரிலியை உள்ளடக்கிய வெப்ப முடுக்கவியலான இரண்டாம் விதி சரி பார்ப்பிற்கு ராமன் விளைவு முக்கிய காரணியாக பங்காற்றி உள்ளது. துகள் பரப்பின் பிரௌனிய அசைவுகளை நீர்மத்தின் பயன்பாட்டு முடிவுகளுக்காக ஆராய ஒரே சோதனை முறையாக சோவியத் விஞ்ஞானிகளே தாங்கள் ராமன் விளையையே பயன்படுத்துவதாக அறிவிக்கிறார்கள். நமது ஆய்வகத்தில், பெங்களூரில் ஐ.ஆர். நிறமாலைமானியை எங்கள் நாட்டு விஞ்ஞானிகளே கட்டமைத்துள்ளனர். சோவியத் மட்டுமல்ல ஜெர்மனியின் பலதர மாதிரிகளைக்கூட இங்குவந்துதான் ஆராய்கிறார்கள்.

கே: பல விஞ்ஞானிகளை அமெரிக்கா போக விடாது இங்கே இந்தியாவுக்கு வரவழைக்க முயற்சிக்கிறீர்கள். இந்தியர்கள் சரி. மாக்ஸ் பர்ன் போன்ற ஜெர்மானியர்களை ஏன் வரவழைக்க முயற்சிக்க வேண்டும். அயல் நாட்டினருக்கு நமது மண்ணை ஆய்வகமாக்குவது தேச துரோகம் என்றுகூட உங்கள் மீது குற்றச்சாட்டு உள்ளதே? (ஐ.ஐ.டி. மாணவர் கலந்துரையாடல், சென்னை)

ப: உலக அறிவியல் ஆய்வின் மையமாக இன்று அமெரிக்காவும் ஐரோப்பாவும் விளங்குகின்றன. அவர்கள் வைத்ததுதான் சட்டம். நமது அறிவியல் ஐரோப்பிய அறிவியலின் கலவை எச்சமாக ஆகிவிடும் அபாயம் உள்ளது. நமது அறிவு வங்கியை நாம் தனித்து வளர்த்தெடுக்க வேண்டும். நமது பல்கலைக்கழகங்கள் வெறும் காகித புலிகளாக மாறும் நிலை உள்ளது. ஆக்ஸ்போர்டில் கலிபோரினியாவில் கேம்பிரிட்ஜில் நடப்பதை அப்படியே இங்கே நிகழ்த்துவதா சுய சார்பு. நான் முழு ஈடுபாட்டோடு தரத்திற்காக சுய சார்புக்காக, தூய சுயசிந்தனை மரபிற்காக எதையும் செய்யத்தூண்டுகிறேன். நேருவுக்கு பிறகான (1966) இந்த காலகட்டத்திலும் எதுவும் மாறவில்லை. நாம் மேற்கு நாடுகளின் நகல்களாகிவிட்டோம். ஜெர்மனியில் மேசான் துகள் கண்டுபிடிப்பிற்கு பிறகு இந்தியாவுக்கு விடுமுறையில் வந்த ஹோமி பாபாவை அன்று நேருவுக்காக சந்தித்தேன். இந்திய மண்ணிற்கு இங்கிலாந்திலிருந்து விக்ரம் சாராபாயை 1939ல் நேரில் செயின்ட் ஜோன்ஸ் கல்லூரி சென்று அழைத்தேன். சென்னையில் ஒரு புள்ளியியல் நிறுவனம் அகமதாபாத் வானியல் ஆராய்ச்சி நிறுவனம் என மத்திய அரசோடு பேசி வரவழைத்தபோது எதற்காக செய்தேனோ அதே நோக்கத்தோடு நண்பர் மேக்ஸ் பர்னை அணுவியலில் ஆய்வுகளை மேற்கொள்ள இங்கே பல்கலைகழக பேராசிரியராக்க முயன்றேன். உலக அறிவியலின் மூன்றாவது மையமாக நாம் திகழ்ந்திருக்க முடியும். வெள்ளையர்கள் பலர், இந்தியாவில் அவர்களது ஆட்சியில் நமது மக்களை வைத்து ஆய்வு செய்து மலேரியாவுக்கு மருந்து, போலியோவுக்கு தடுப்பு என இறங்கியபோது, நம்மால் உலக அறிவியல் அரங்கில் இன்று மதிப்பு மிக்க விஞ்ஞானிகளை வரவழைப்பது கூட முடியாத நிலை இருப்பது துரதிர்ஷ்டம். சோவியத் விஞ்ஞானி நண்பர் ஒருவர் எனக்கு உண்டு. சோவியத் விஞ்ஞானி அவரை சந்திக்க வரும் போதெல்லாம் எனக்கு தர்ம சங்கடமாக இருக்கும். நமது நண்பர் அமெரிக்க டூர், கெனடா மாநாடு என பறந்துவிடுகிறார். நமது இந்திய நாடு இத்தகைய அரங்கங்கள், சொற் பொழிவுகள் நடக்கும் மையமாவது எப்போது?

கே: விஞ்ஞானக் கூடங்கள், அறிவியல் முன்னேற்றம் எல்லாமிருந்தும் ஏழைகளின் வறுமை தொடர்கிறதே? (ஐ.ஐ.டி மாணவர் சந்திப்பு, சென்னை மற்றும் பாட்னா பல்கலைகழகம்)

ப: அறிவியலை நாம் கிராமங்களுக்கு எடுத்துச் செல்லவில்லையே. அறிவியலாளர்கள் தங்களது திறந்த ஆய்வகங்களாக கிராமப்புற பசுமை சூழலை கருதி அங்கே செல்ல வேண்டும். நமது மக்களால் சாதி மத சம்பிரதாயங்களிலிருந்தே மீண்டு வர முடியவில்லை. மத சடங்குகளிலிருந்து மனிதனை மீட்கத்தான் அறிவியல். மூடநம்பிக்கையில் நாடு இருண்டு கிடக்கிறது. பெண்கள் அறிவியல் தொழில் நுட்ப தளவாட இயலுக்குள் நுழைய வேண்டும். அவர்கள் அஞ்சத் தேவை இல்லை. ஆண்களிடம் இல்லாத ஒரு இயல்பு பெண்களுக்கு குறிப்பாக நமது பெண்களுக்கு உள்ளது. பொறுமை மற்றும் அற்பணிப்பு, அறிவியலில் சாதிக்க தேவைப்படும் அடிப்படைகளில் அது தான் பிரதானமானது. நாம் அறிவியல் அறிவு என்பது ஆண்களின் சொத்து என கருதக்கூடாது. ஆனால் இந்த ஐ.ஐ.டி. (சென்னை) வளாகம் எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது. முழுக்க முழுக்க வனமாக உள்ள ஆயிரக்கணக்கான மரங்களின் பறவைகளின் மான்கள் உள்ளிட்ட விலங்குகளின் மத்தியில் ரொம்ப தள்ளி அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆய்வகம், நூலகம் துறைகள்... உலகில் இது மாதிரி தான் கல்விக்கூடம் இருக்க வேண்டும். இந்தியாவில் தன்னிறைவு பெற்ற அறிவியலும் முழுமனதோடு மக்கள் பசிக்காக அற்பணிப்புடன் திட்டமிட்டு நிரந்தர தீர்வு நோக்கி உழைக்கும் அரசுமே இன்றைய தேவை.

கே: நோபல் பரிசு பெற்றபோது எப்படி உணர்ந்தீர்கள்? ஒரு புகை படம் கூட எடுக்கப்படவில்லையே? (அசோசியேட்பிரஸ்)

ப: இன்று (1949) அது பற்றி பேசுவது பெரிய தாக்கத்தை உணர வைக்காது. 1908ல் ஆஷீபாபுவுடன் இணைந்து லண்டன் ராயல் கல்வியக அறிவியல் ஏட்டில் ஆய்வு கட்டுரை எழுதிய பிறகு அடுத்தடுத்து உலக அறிவியலாளர்களது அதிவேக நூற்றாண்டில் இணைந்தபடியே நமது தேசிய எழுச்சியிலும் பங்காற்றுவதை நாம் தவறவிடக் கூடாது என விரும்பினேன். 1924லிலேயே ராயல் கழக உறுப்பினராக பிரிட்டிஷார் அங்கீகரித்தாலும் ஜெர்மனி மற்றும் இதர ஐரோப்பிய அறிவியல் சமூகம் இந்திய மண்ணிலிருந்து துளிர்ந்த அறிவியல் மற்றும் கணித எழுச்சிகளை கணக்கிலெடுக்க தவறவில்லை. 1930 நோபல் பரிசு பெற நான் போவதற்கான முயற்சியில் மைசூர் மகாராஜாவிலிருந்து நூற்றுக்கணக்கானவர்களின் பங்களிப்பு உள்ளது. தேசம் முழுதும் இணைந்து ஒரு பிரதிநிதிபோல பதாகையையும் பெற்றுக் கொண்டு வந்து இருக்கையில் அமர்ந்தபோது உலகிலேயே தனி மனிதனாய் உணர்ந்துவிட்டேன். என்கண்களிலிருந்து கண்ணீர் கொப்பளித்தது. பிற நாட்டு நோபல் பரிசாளர்களின் இருக்கைகளில் அவரவர்களது நாட்டு கொடியே பறக்கவிடப்பட்டிருந்தது. என்னை ஒரு பிரிட்டிஷ் பிரஜையாகவே அவர்கள் நடத்தி இருக்கிறார்கள் எனும் நினைப்பே என் கண்ணீருக்குக் காரணம் புகைபடம் எடுத்துக் கொள்வது பற்றியெல்லாம் நான் அப்போது நினைக்கக்கூட இல்லை.

கே: ராமன் ஆய்வகம் பெங்களூரில் கட்டப்படுவதாக அறிகிறோம். ஒரு அடிக்கல் நாட்டு விழா கூட நடத்தப்பட்டதாக தெரியவில்லையே. (ஜி.டி. நாயுடு நடத்திய ராமன் விருந்து, கோவை).

நான் ஒரு ஆய்வு நிறுவனத்தை Research Instituteபெங்களூரில் கட்டி வருவது ஒன்றும் புதிய செய்தி அல்ல. கடந்த ஐந்தாண்டுகளாக என்னைப் பற்றி நீங்கள் எதுவுமே அறிந்திருக்க முடியாது. நான் வெளிநாடு போய்விட்டதாக கூட சொல்லிவருகிறார்கள். எந்தவிழாக்களுக்கும், விருந்துகளுக்கும் நான் போகவில்லை. ஆய்வு நிறுவனத்தை கட்டுவதிலேயே என் முழுநேரத்தையும் செலவிடுகிறேன். அடிக்கல் நாட்டும் விழா... வாசற்கால் வைக்க ஒரு சடங்கு.. இதில் எதிலுமே எனக்கு நம்பிக்கையோ உடன்பாடோ கிடையாது. ஆசியாகண்டம் முழுமைக்குமான அறிவியல் ஆராய்ச்சியின் வளர்ச்சியின் செயல்பாட்டு மையமாக ராமன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் (ஸிஸிமி) விளங்கும். இந்தியா மட்டுமல்ல பிற நாடுகளில் இருந்தும் அந்த ஆய்வுக் கூடத்திற்கு வந்து வருங்கால சந்ததிகள் உலக அறிவியல் அரங்கை உலுக்குவார்கள். விஞ்ஞானிகளின் மெக்கா என அது அழைக்கப்படும்.. போற்றப்படும். இந்தியா, அறிவியல் எழுச்சியில் உலகிற்கே வழிகாட்டும்.
***

நன்றி: புதிய புத்தகம் பேசுது (பிப்ரவரி 2014)

'மத சடங்குகளிடமிருந்து  மனிதனை மீட்கவே  அறிவியல்!

நன்றி: புதிய புத்தகம் பேசுது (பிப்ரவரி 2014)'