Saturday, March 7, 2015

Indira Gandhi: VSV Ramanan: Indian Prime ministers

அந்தப்பெண்
அந்த கம்பீரமான வீட்டின் பெரிய நுழைவாயில் வழியாக ஒரு ஜீப்பில் வந்திறங்கிய போலீஸ் அதிகாரிகள் வீட்டின் சோபா, நாற்காலிகளை ஜப்தி செய்ய முயற்சிக்கிறார்கள். அப்போது அந்த வீட்டில் இருந்த 8 வயது சிறுமி மிகத் துணிவுடன் ”நிறுத்துங்கள் இங்குள்ள எதையும் நீங்கள் எடுக்க கூடாது. என் அப்பாவும் தாத்தாவும் ஜெயிலுக்குப்போயிருக்கிறார்கள். அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை. அப்பா விடுதலையாகி வந்தபின் வாருங்கள்” என கண்டிப்புடன் சொல்லுகிறார். அவர்கள் கோர்ட்டில் கட்டவேண்டிய அபராத தொகையை செலுத்ததால் தான் நாங்கள் இதைச்செய்யகிறோம் என்கிறார் அதிகாரி. ”அதெல்லாம் எனக்கு தெரியாது. நாளை என் அத்தை வந்தபின் அவரிடம் பேசுங்கள்”:. இன்று பொருட்களை எடுத்தால் என் தாத்தா உங்கள் மீது வழக்கு போடுவார் என்கிறார் அந்த பெண். அந்த சிறு பெண்ணின் துணிவை கண்டு அசந்துபோன அந்த அதிகாரி, உன்பெயர் என்ன என்ற கேட்டதற்கு அந்த பெண் சொன்ன பதில் ”இந்திரபிரியதரிசினி என எழுதிக்கொள்ளுங்கள்.” 
பெண் என்பவள் மிகப்பெரிய மஹாசக்தி என வர்ணிக்கிறான். பாரதி. இந்தப் பெண் தன் வாழ்நாளில்; பல கட்டங்களில்அதை நிருபித்தவர். தாயின் மீதுபாசம், தந்தையின்மீது அளவற்ற அன்பு, கொண்டிருந்த பெண்ணாக வளர்ந்தாலும் தன் எண்ணங்களிலும் முடிவுகளிலும், அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவராக துணிவுடன் செயல்படுத்துவராக இருந்தார். உடல் நலமற்ற தாய், அடிக்கடி சிறைக்கும், பயணங்களிலும் செல்லும் தந்தை, எப்போது கண்டிப்பு காட்டும் அத்தை என வளர்ந்த அந்த பெண் இளமைப்பருவத்தில் ஒரு போதும் ஒரு சாராசரி இந்தியப் பெண்போல சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிக்கவில்லை, தாயின் மறைவுக்கு பின்னர் 18 வயதில் இங்கிலாந்துக்கு படிக்க போனவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுவிடுகிறது. பதறிப்போய் நாடுதிரும்பாமல் ஸ்வீஸ் நாட்டில் தனியாக தங்கி சிகிச்சை பெறுகிறார். இந்திய விடுதலைக்காக இங்கிலாந்தில் போரடும் குழுவிலிருக்கும் பிரோஸை அங்கு சந்திக்கிறார். நட்பு காதலாக மலர்கிறது. தந்தையும், உறவுகளும் அந்த காதலை விரும்பவில்லை. ஆனால் தன் துணிவால் பாசபோராட்டங்களை வெல்கிறார் அந்தப் பெண்.
பல சவாலான கட்டங்களை கடக்கும் தந்தையின் அரசியல் வாழ்க்கையில் உதவுகிறார். திருமணதிற்கு பின் கணவனும் மனைவியும் இணைந்து நாட்டுக்காக போராடி ஒன்றாக சிறை செல்லும் அளவிற்கு அன்னோனியமாக இருந்த மணவாழ்க்கை இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர் விரிசல் காண்கிறது. கணவனை பிரிந்து 10 ஆண்டுகளுக்கு மேல் தனித்து வாழ்கிறார், தேசம் முழுவது அறிந்த தங்கள் குடும்பத்தின் கெளரவம் பற்றி பேசப்படுமே என்பதைப்பற்றியெல்லாம் எந்த அச்சமும் கொள்ளவில்ல அந்தப் பெண். 
விடுதலைபோரில் வெற்றிகண்ட புதியதேசத்தின் பிரதமராகிறார் தந்தை. அப்போது கணவர் எதிர்கட்சியில் அமர்ந்து அவரது தந்தையின் அரசுமீது ஊழல் குற்றம் சாட்டுகிறார். யார் சரியென்ற நிலையை எடுக்காமல் துணிவுடன் ”உண்மை வெளியாகட்டும்” என்கிறார். பல ஆண்டுகள் பிரிந்து வாழந்தாலும் கணவர் மாரடைப்பால் பாதிக்கபட்டபோது உடைந்த திருமணவாழ்வு மீண்டும் மலர்கிறது ஆனால் இரண்டு ஆண்டுகள் கூட அந்த வாழ்க்கை தொடர.அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை.கணவர் இறந்துவிடுகிறார். அதனால் மனம் உடைந்து விரக்தி அடையந்துவிடவில்லை அந்தப் பெண்..
தந்தை பிரதமராக இருந்த காலத்திலியே , இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராகிறார். ஆனால் அப்படி தந்தையின் பிரதிநிதியாக நடிக்க நேர்ந்தது பிடிக்காமல் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார்.. தந்தையின் மரணத்துக்கு பின் எழுந்த அரசியல் சூழல் அவரை மீண்டும் அரசியலுக்கு இழுக்கிறது. மத்திய அமைச்சராக இருந்தவர் அன்றைய பிரதமரின் எதிர்பாராரத மரணத்துக்கு பின் கட்சியின் பலபரீட்சைகளுக்குபின் பிரதமாக்கபடுகிறார்.. பிரதமரானவுடன் உறுதியுடன் செயல்படுகிறார். தன் சோஷலிச பார்வையை ஏற்காத மூத்த தலைவர்களை, தந்தையுடன் இணைந்து பணியாற்றிய தலைவர்களை துணிவுடன் எதிர்க்கிறார். கட்சி உடைகிறது. மன உறுதியுடன் தன் அணியை வலுப்படுத்தி போரட்டங்களுடன் ஆட்சியைத் தொடர்கிறார். அடுத்த வந்த தேர்தலில் மக்களின் எகோபித்த பெருபான்மையை பெற்று கட்சியிலும் ஆட்சியிலும் தன்னை நிலை நிறுத்தி பிரதமராக தொடர்கிறார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழிநடத்துவதில் பல சவால்களை சந்திக்கிறார். அந்தபெண்.
அண்டை நாட்டில் எழுந்த ஒரு பிரிவினை பிரச்ச்னையை ஒரு எல்லைப்போராக்கி ஒரு புதிய தேசத்தையே உருவாக்கி உலகை ஆச்சரியப்படுத்துகிறார். அமெரிக்க வல்லரசைகூட எதிர்க்க துணிகிறார். கட்சியின் பலமும் வெற்றிகளும் அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை ஏற்படுத்துகிறது. துணிவும் ஆற்றலும் ஆணவமாக மாறுகிறது.. சட்டத்தைவளைத்து அவசர நிலையை அறிவித்து சர்வ அதிகாரத்தையும் பெறத்துணிகிறார். அந்தப் பெண்
அடுத்த தேர்தலில் மக்கள் அவரை தூக்கி ஏறிந்து தண்டிக்கிறார்கள்.. துவண்டுபோகவில்ல இந்த இரும்பு மனிஷி. மாற்றாக அவருக்கு பதிலாக ஆட்சிக்கு வந்தவர்கள் எதையும் சாதிக்காதால் மீண்டும் பினிக்ஸாக எழுகிறார். ஆட்சியை பிடித்து பிரதமாகிறார்..பெற்ற படிப்பினைகளினால் அரசியலில் மிதமான போக்கிருந்தாலும் துணிவைக் கைவிடவில்லை. நாட்டின் ஒரு மாநிலத்தில் எழுந்த பிரிவினைவாத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கியதின் விளைவாக அவர்களின் எதிர்ப்பை பெற்றிருந்தார். . அந்த மாநிலத்தவர்கள் தான் அவரின் பாதுகாவலர்கள். அதனால் அவர்களை மாற்றிவிடலாம் என்ற யோசனையை சொன்ன உள்துறை அமைச்சரை கண்டிக்கிறார். அந்தப் பெண்.
புவனேஸ்வரில் ஒரு கூட்டத்தில் பேசும்போது "இன்று நான் இங்கிருக்கிறேன். நாளை இருப்பேனா என்று தெரியாது... என் கடைசி மூச்சு உள்ளவரை நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சேவை செய்வேன். நான் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்த நாட்டை வளப்படுத்தும்; பலப்படுத்தும்.” என்று சொல்லுகிறார்.. மறுநாள் அவரைப் பாதுகாக்கவேண்டியவர்களாலேயே கொல்லப்படுகிறார். அந்த பெண். 
.சந்தோஷமில்லாத இளமைக்காலம்,, சவாலான காதல், முறிந்த மணவாழ்க்கை தன் தலமையை ஏற்காத கட்சியினர், ஆட்சியிலேற்பட்ட களங்கம், தவிர்த்திற்கூடிய மரணம் இப்படி தன் வாழ்நாள் முழுவதும் துணிவை துணையாக கொண்டு அதன் விளைவுகளை சந்தித்த இந்தப் பெண்ணை மகளிர்தினத்தில் அனைத்து பெண்களும், ஏன் ஆண்களும் கூட நினைவுகூறவேண்டும்.

'அந்தப்பெண்

.சந்தோஷமில்லாத இளமைக்காலம்,, சவாலான காதல், முறிந்த மணவாழ்க்கை தன் தலமையை ஏற்காத கட்சியினர், ஆட்சியிலேற்பட்ட களங்கம், தவிர்த்திற்கூடிய மரணம் இப்படி தன் வாழ்நாள் முழுவதும்  துணிவை துணையாக கொண்டு அதன் விளைவுகளை சந்தித்த  இந்தப் பெண்ணை  மகளிர்தினத்தில்  அனைத்து பெண்களும், ஏன் ஆண்களும் கூட நினைவுகூறவேண்டும்.'
Like ·  · 
  • Vedha Gopalan பெண்களும், ஏன் ஆண்களும் கூட நினைவுகூறவேண்டும்.

    Excellent. best way to remind MARCH 8th! (marking/marching!)
    2 hrs · Edited · Like
  • Valiyur Subramanian அருமையான பதிவு. கடைசி வரிகளின் கனம்...கனத்தது மனம்.