Thursday, December 31, 2015

Best Tamil Books of 2015: DJ Thamilan

பிடித்த புத்தகங்கள்
-------------------------------
பட்டியல் இடுவதில் எனக்கு எந்தப் பொழுதிலும் நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் பிறர் எந்த நூற்களை வாசிக்கின்றார்கள்/திரைப்படங்களை இரசிக்கின்றார்கள்/இசையைக் கேட்கின்றார்கள் என்பதையறிவதில் ஆர்வம் எப்போதும் இருந்துகொண்டேயிருக்கும். நூலகங்களிற்குள்ளோ, புத்தகசாலைகளுக்குள்ளோ நுழையும்போது அவற்றின் எண்ணிக்கையைப் பார்த்து வியக்கும்போதெல்லாம் நல்ல புத்தகங்களைத் தவறவிடுகின்றேனோ என்று கவலைப்படுவதுண்டு. சட்டென்று யாரோ ஒருவர் எழுதிய சிறுகுறிப்பை வாசித்து அது நினைவுக்குள் வந்து அந்த நூலைக் கண்டுகொள்ளும்போது அறிமுகப்படுத்தியவர்க்கு மானசீகமாய் நன்றி கூறுவதுண்டு. இவ்வாறே திரைப்படங்களும், இசையிற்கும் எனக் கொள்க.
இந்த வருடம் முடிகின்றவேளையில் நான் இந்த ஆண்டு வாசித்த நூற்களில் பிடித்த புத்தகங்களை தந்திருக்கின்றேன். வாசித்த எல்லா நூற்களும் நினைவினில்லை. நினைவில் வந்தவற்றில் பிடித்த புத்தகங்கள் இவை.
நண்பர்கள் தாங்கள் இந்த வருடத்தில் வாசித்தவற்றைப் பகிர்ந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.

-நிலவொளி எனும் இரகசிய துணை -எம்.டி.முத்துக்குமாரசாமி (கட்டுரை)
-Island of a Thousand Mirrors - Nayomi Munaweera (Novel)
-விடமேறிய கனவு - குணா கவியழகன் (நாவல்)
-லெனின் சின்னத்தம்பி - ஜீவமுரளி (நாவல்)
-இன்னும் வராத சேதி - ஊர்வசி (கவிதை)
-Ways of Going Home -Alejandro Zambra (Novel)
-மானுட யத்தனம் என்றால் என்ன - ராஜன் குறை (கட்டுரை)
-சிறு புள் மனது - திருமாவளவன் (கவிதை)
-Box கதைப் புத்தகம் - ஷோபா சக்தி (நாவல்)
-Numero Zero - Umberto Eco (Novel)