Monday, March 9, 2015

Movie Reviews: Leviathan: World Cinema: Best Foreign Films Oscar


\\படத்தின் இறுதியில் church ல் பிரார்த்தனை கூட்டம் நடக்கும் காட்சி ஒன்று வருகிறது. அத்துனை நாளும் அடாவடியும் உள்ளடி வேலைகளையும் செய்து கொண்டிருக்கும் நகர மேயர் மிகுந்த பக்தி சிரத்தையோடு தமது குடும்பத்தோடு அதில் பங்கு பெறுகிறார். தமது மகனின் காதருகே சென்று "God is seeing everything son " என்று குசுகுசுக்கிறார். ஆகச்சிறந்த நகைமுரண் காட்சி இது. தமது அடக்குமுறைகள் குறித்தெல்லாம் மதகுருவுடன் அவ்வப்போது கலந்து பேசி ஆலோசனைகள் பெற்றபடி இருப்பார் மேயர். ஊரை அடித்து உளையில் போடுபவர்கள் எப்போதும் மதத்தோடும் , மதவாத சக்திகளோடும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்கள். கடவுள் முன் நிற்கும் போது கூட அவர்களுக்கு கூசுவதில்லை என்பதனை முகத்தில் அறைந்து சொல்லும் காட்சி இது.\\


Boyhood ற்குப் பிறகு அசர வைத்த படம் Leviathan. ரஷ்யாவின் ஒதுக்குப்புறமான கடலோர கிராமத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பம் அதிகாரத்தின் இரும்புக் கரங்களால் எவ்வாறு ஒடுக்கப்படுகிறது என்பது கதைக்களம்.

வளர்ப்புத் தாய் - பதின் பருவத்து மகன் , இவர்களுக்குள் நிலவும் உளவியல் சிக்கல்கள், புது மனைவியையும் இளம் வயதிலேயே தாயை இழந்துவிட்ட மகனையும் ஒருசேர அன்பு செலுத்தி குடும்பம் நடத்த முயலும் நாயகனின் முனைப்பு , தடுமாற்றம் என போகிற போக்கில் மனிதனின் அகச் சிக்கல்களையும் காட்சிப்படுத்தும் ஃபர்ஸ்ட் க்ளாஸ் ட்ராமா Leviathan.

படத்தின் இறுதியில் church ல் பிரார்த்தனை கூட்டம் நடக்கும் காட்சி ஒன்று வருகிறது. அத்துனை நாளும் அடாவடியும் உள்ளடி வேலைகளையும் செய்து கொண்டிருக்கும் நகர மேயர் மிகுந்த பக்தி சிரத்தையோடு தமது குடும்பத்தோடு அதில் பங்கு பெறுகிறார். தமது மகனின் காதருகே சென்று "God is seeing everything son " என்று குசுகுசுக்கிறார். ஆகச்சிறந்த நகைமுரண் காட்சி இது. தமது அடக்குமுறைகள் குறித்தெல்லாம் மதகுருவுடன் அவ்வப்போது கலந்து பேசி ஆலோசனைகள் பெற்றபடி இருப்பார் மேயர். ஊரை அடித்து உளையில் போடுபவர்கள் எப்போதும் மதத்தோடும் , மதவாத சக்திகளோடும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்கள். கடவுள் முன் நிற்கும் போது கூட அவர்களுக்கு கூசுவதில்லை என்பதனை முகத்தில் அறைந்து சொல்லும் காட்சி இது.

படத்தில் இன்னொரு முக்கிய அம்சம் போட்டோகிராபி. அழகான பின்னனி காட்சிகள் கதையை மீறி துருத்திக் கொண்டிராமல் அதன் போக்கிலேயே ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்கின்றன. வசனங்களில் வரும் ஊர் பெயர்களை வைத்து கூகுள் மேப்ஸில் தேடிப் பார்த்தேன். லிதுவேனியாவில் கொண்டு போய் நிறுத்துகிறது. லிதுவேனியா இன்னமும் ரஷ்யாவின் பகுதிதானா? அல்லது கதை நடந்த காலத்தில் ரஷ்யாவுடன் இருந்ததா என்பது புரியவில்லை. இப்படி எல்லாம் குழம்பாமல் பால்டிக் கடலின் அழகைப் பாரடா மூடா என்கிறது உள்மனம்.

படம் பார்ப்பதற்கு முன்பு Leviathan என்பது படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயராக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி ஒரு பாத்திரமே படத்தில் இல்லை. மீண்டும் கூகுள் ஆண்டவரிடம் சென்றேன் Leviathan என்பதற்கு // a thing that is large or powerful especially an organization // // biblical use - a sea monster // என்று பொருள் கொடுத்திருக்கிறார்கள். perfect title. ஒரு சர்வாதிகார அரசாங்கத்தைக் குறிக்க இதைவிட சிறந்த சொல் கிடைப்பது கடினம். இந்த படத்திற்கு இதை விட சிறந்த டைட்டில் வைக்க முடியுமா தெரியவில்லை. குறியீட்டில் நம்மை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுவார்கள் போலிருக்கிறது.

சிறந்த வேற்று மொழி படத்திற்கான ஆஸ்காரை மயிரிழையில் தவர விட்டிருக்க வேண்டும். அந்த பிரிவில் அவார்ட் வாங்கிய Ida .. நாளைக்கு. smile emoticon
Like ·  · Share · 7 hrs · Edited