Monday, March 30, 2015

Tamil Epics Conference at Kuala Lumpur, Malaysia: Bharathanatyam performance: Sangam Dances

ஐப்பெருங்காப்பிய மாநாடு சமீபத்தில் கோலாலம்பூரில் நடந்தது. தமிழின் மூத்த இலக்கியங்களை இளைஞர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்குடன் இம்மாநாடு மலேசிய இளைஞர்களால், குறிப்பாக தனேஷ் பாலகிருஷ்ணன் போன்றோரால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. முதல் நாள் முழுவதும் ஆய்வுக் கட்டுரைகள். இரண்டாம் நாள் நாட்டிய நாடகம். குருவாயூர் உஷாதுரை அவர்களின் இயக்கத்தில் ஐம்பெரும் காப்பியங்களும் மேடை கண்டன. Broadway showவில் வருவது போல் நர்த்தகர்களை இயங்க வைத்தது அழகு. எங்கோவொரு கோபி கிருஷ்ணா, ஒரு கேளு சரண் ஒரு ரம்லி. அவ்வளவுதான். It was a joy to see young handsome males performing baratha natyam. பெண்கள் அழகு என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. கண்ணகிக்கு ஒத்து மாதவியை உயர்த்திக் காட்டினர். குண்டலகேசி காட்டும் பெண் புதுமையானவள். இலக்கியத்தை முடக்கிவிட்டால் சுதந்திரக்குரல் சமூகத்தில் கேட்காமலே போய்விடும். எப்படியோ அன்றே ஒரு 'பாரதிராஜா' இருந்திருக்கிறார். அக்காப்பியங்கள் எல்லாம் வணிகர் குலத்தைச் சுற்றியே வருவது பௌத்த, சமண மதங்கள் எவ்வளவுதூரம் வணிகர்களைச் சார்ந்திருந்தன என்பதைக்காட்டுகிறது. தென்னாசிய, தூரகிழக்கில் பௌத்தம் பரவ இதுவே காரணம். இவையனைத்தும் சங்ககாலமா? இப்படி இந்த நாடக நிகழ்ச்சி சிந்திக்க வைத்தது. அடுத்த நாள் ஒரு இலக்கியக்கூடல் எற்பாடு செய்திருக்கலாம்! To inspire youngsters!