வெண்முரசின் தருமன் ஒரு "காந்திய" வார்ப்பு என்று விளக்கி சில நாட்கள் முன்பு வாசகமணி ஒருவர் காத்(ந்)திரமான பதிவொன்று எழுதியிருந்தார்.
"நாம் பீஷ்மரை காந்தியைக்கொண்டே புரிந்துகொள்ள முடியும். காந்தியைப் போல பீஷ்மரும் கடைசி வரை உலகியல் களத்தில் தான் இருந்தார்" - இப்போது ஜெயமோகன். இது புதுசல்ல. ஷஷி தரூரின் The Great Indian novel என்ற மகாபாரத நாவலில் Gangaji என்ற பாத்திரத்தில் இதையே செய்திருக்கிறார். அந்த பிடிவாதமிக்க கோமாளித் தனமான காந்தி பாத்திரம் பீஷ்மரின் சாயலில் படைக்கப் பட்டது.
இந்த பாரதத்தில் தான் எத்தனை காந்திகள்!
பி.கு: தரூரின் நாவலில் பாண்டு போஸ், திரிதராஷ்டிர ஜவஹர், முகமது அலி கர்ணா, இந்திரா பிரிய துர்யோதனி ஆகியோரும் உண்டு smile emoticon smile emoticon