இன்று நான் வாசித்து முடித்த புத்தகம் நாமக்கல் கவிஞரின் சுயசரிதையான என் கதை.எளிமையான விறுவிறுப்பான நடையில் எழுதியிருக்கிறார்.நாமக்கல் கவிஞர் நல்ல சித்திரக்காரர்,கருப்பு -வெள்ளை புகப்படக்கலைஞர்,பயணங்களில் பிரியமுள்ளவர்,நாடகத்தின்பால் ஈர்ப்புக்கொண்டவர் ,சுதந்திரவேட்கையில் சிறை சென்றவர் என அவருடைய ஆளுமை பன்முகத்தன்மைகொண்டு பரந்துவிரிந்தது.கிட்டப்பா போன்ற நாடககலைஞர்களுக்கு பாடல் எழுதிக்கொடுத்தவர் அந்த பாடல்களை சேகரிக்காமலே விட்டுவிட்டவர்.மாணிக்க நாயக்கர் என்கிற நண்பருடன் வடநாடு யாத்திரை செல்லும் அத்தியாயம் அற்புதமான பதிவு.பழனியப்பா பிரதர்ஸ் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையின் என் கதை -யை 1968ல் முதற்பதிப்பாய் வெளியிட்டுள்ளது.ஏழாம் பதிப்பு 2010ல் .வாசித்துப்பாருங்கள்.